வென்டிலேட்டரில் சுவாசம்? உடல்நிலை மோசம்! "ஜூம் மீட்டிங்கில்" விளக்கேற்றி வழிபட்ட நித்யானந்தா சீடர்கள்
டெல்லி: மூச்சுத்திணறல் ஏற்பட்டு சுவாசிக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருக்கும் நித்யானந்தா விரைவில் குணமடைய அவரது சீடர்கள் ஜூம் மீட்டிங்கில் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.
நித்யானந்தா இந்தியாவிலிருந்து தப்பி வரும் போது ரூ 1000 கோடி ஆசிரம பணத்தை தங்க கட்டிகளாக மாற்றி கொண்டு கைலாசாவில் வசித்து வருவதாக சொல்கிறார்.
கைலாசாவில் நன்றாக ஜாலியாக வசித்து வந்த நித்யானந்தா, தன்னை விமர்சிப்பவர்களை லைவ் வீடியோவில் வெளுத்து வாங்கி வந்தார். 45 வயதாகும் நித்யானந்தா எந்த கவலையும் இல்லாமல் ஜாலியாக இருக்கிறாரே என்றெல்லாம் பேசப்பட்டது.

யார் கண்ணு பட்டதோ
இந்த நிலையில் யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை. நித்யானந்தாவுக்கு உடல்நிலை மோசமாகியுள்ளது. அவருக்கு கல்லீரல் அழற்சி ஏற்பட்டுள்ளது. அது போல் நுரையீரல் பிரச்சினை, சிறுநீரக பிரச்சினை ஆகியவை ஏற்பட்டதாக தெரிகிறது .மேலும் அவர் மூச்சு விட சிரமப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

பேஸ்புக் பக்கம்
எனினும் அவரது பேஸ்புக் பக்கத்தில் அவர் பதிவிட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. அதில் அவர் தான் பூரண நலம் பெற அருணகிரி யோகேஸ்வரனுக்கு விளக்கேற்றி வழிபட்டு அதை செல்பியாக எடுத்து எனக்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். மேலும் தான் தியான நிலையில் இருப்பதால் கண் விழித்தால் செல்பி படங்களை பார்ப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

பிரார்த்தனை
இந்த நிலையில் அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் கவலையில் உள்ள சீடர்கள் ஜூம் மீட்டிங் காலிற்கு ஏற்பாடு செய்தனர். அதில உலகெங்கும் வசிக்கும் நித்யானந்தாவின் சீடர்கள் இணைந்தனர். அப்போது நித்யானந்தா பூரண நலம் பெற வேண்டி பிரார்த்தனை செய்தனர்.
Recommended Video

இந்தியா
இவரை இந்தியாவுக்கு கொண்டு வந்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் நித்யானந்தா இந்தியாவுக்கு வந்தால் அவர் கைது செய்யப்படுவார் , இல்லாவிட்டால போலீஸ் கண்காணிப்பில் மருத்துவ சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவார் என தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications