இந்துக்களுக்கு இந்து மதம் குறித்து தெரியாது.. தி கேரளா ஸ்டோரிக்கு ஆதரவாக நித்தியின் பெண் சீடர்கள்
டெல்லி: தி கேரளா ஸ்டோரி படத்தை நித்யானந்தாவின் பெண் சீடர்கள் ஆதரவாக பேசியுள்ளனர்.
தி கேரளா ஸ்டோரி எனும் திரைப்படம் கடந்த மே 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கேரளாவைச் சேர்ந்த 32 ஆயிரம் இந்து இளம்பெண்களை மூளைச்சலவை செய்து மதம் மாற்றி பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக இந்த படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்த படத்திற்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதற்காக தியேட்டர் வாசலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டன. முஸ்லீம் அமைப்புகள் போராட்டம் நடத்தவும் அறிவித்திருந்தன.

எதிர்ப்புகளை தொடர்ந்து இந்த படத்திற்கு தடை விதிக்கப்பட்டது. அது போல் இந்த படம் மேற்கு வங்கத்தில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் வரிவிலக்கு அளித்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
சமூகவலைதளங்களிலும் இந்த படத்திற்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் சர்ச்சைக்குரிய நித்யானந்தாவின் பெண் சீடர்கள் சிலரும் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு ஆதரவாக பேசுவது போன்ற வீடியோ நித்யானந்தாவின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில் இந்த படம் அப்பாவி இந்துப் பெண்கள் எப்படி மூளைச் சலவை செய்யப்பட்டு மதம் மாற்றப்படுகிறார்கள் என்பதை இந்த படம் துணிச்சலாக விளக்கமாக கூறியுள்ளது. இந்த பெண்கள் மதம் மாறிய பிறகு எப்படி சித்ரவதையை எதிர்கொண்டார்கள் என்ற நிஜ வாழ்க்கை கதைகளை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.

இது குறிப்பிடப்பட்ட எந்த மதத்தையும் குறி வைக்கவில்லை. ஆனால் புள்ளி விவரப்படி பேசினால் முஸ்லீம் மக்கள்தொகை 35 மில்லியனிலிருந்து 172 மில்லியனாகவும் இந்தியாவில் கிறிஸ்துவ மக்கள் தொகை 8 மில்லியனில் இருந்து 28 மில்லியனாகவும் வளர்ந்துள்ளது.
ஆனால் இந்துக்களின் மக்கள தொகை வளர்ச்சி விகிதம் என்பது குறைந்து கொண்டே வருகிறது. இதற்கான மூல காரணம் என்னவென்றால் பெரும்பாலான இந்துக்களுக்கு இந்து மதம் பற்றி தெரியாது. நீங்களும் உங்கள் அடுத்த தலைமுறையினரும் இந்து மதத்தைப் புரிந்து கொள்வது முக்கியம். சுவாமி நித்யானந்தா பரமசிவம் உங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிப்பதற்காக பிரத்யேகமாக 21 நாட்களை வடிவமைத்துள்ளார். இந்து மதத்தின் சிறந்த அனுபவத்தை உங்களுக்குக் கொடுங்கள். இந்து மதத்தின் மிகவும் உண்மையான மற்றும் அறிவியல் அனுபவம் கிடைக்க வருகிற 15-ஆம் தேதி முதல் ஜூலை 4-ஆம் தேதி வரை 21 நாட்கள் நடைபெறும் பிரத்யேக நிகழ்ச்சியில் சேரவும் என பெண் சீடர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications