தி.மலை கோவிலில் புளி சோறு வாங்கிட்டு நான் பாட்டுக்கு இருந்தேன்.. என்னை பெரியாளாக்கிட்டீங்க.. நித்தி
Recommended Video
டெல்லி: திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் புளி சோறு வாங்கிட்டு நான் பாட்டுக்கு கிடந்தேன். என்னை பெரிய ஆளாக்கிட்டீங்க என நித்யானந்தா தனது புதிய வீடியோவில் தெரிவித்துள்ளார்.
தினமும் ஏதாவது நக்கல் நய்யாண்டி செய்து வரும் நித்யானந்தா இன்றும் ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். இதில் அவர் கூறுகையில் திருவண்ணாமலையில் நான் இருந்த போது என்னை அடிக்காமல் விட்டிருந்தால் அங்கேயே 100 ஆசிரமத்தோடு இன்னொரு ஆசிரமம் என்ற பெயருடன் அங்கேயே இருந்திருப்பேன்.
நான் எந்த சாமியாருக்கும் போட்டியாக வரவில்லை. ஆனால் 4 பேர் சேர்ந்து கொண்டு என்னை அடி அடி என அடித்தனர். நான் 100 அடிக்கு\ 200 அடி கட்டடத்துக்குள் எங்கேயோ முடங்கி கிடந்திருந்தேன்.

மீனாட்சி
அங்கேயும் விடாமல் ரவுண்ட் கட்டி அடித்தால் நான் என்னதான் செய்வது? மீனாட்சி மீனாட்சி என்றேன். அதற்கு என்னாச்சி என்னாச்சி தம்பி என்றார். கோவிலுக்குள் விடமாட்டேன் என்கிறார்கள் தாயே என்றேன். அதற்கு கவலைப்படாதே ஒரு கோவில் கட்டி கொடுத்து விடுகிறேன் என்று சொன்னார். பின்னர் மீனாட்சி மீனாட்சி என்றேன்.

கைலாசம்
அம்மா என்னாச்சி என்னாச்சி என்று கேட்டார். ஆதீனத்துக்குள் வரக்கூடாது என்கிறார்கள் என்றேன். அதுக்கென்ன கவலைப்படாதே தம்பி உனக்கு ஒரு ஆதீனம் கட்டிக் கொடுத்து விடுகிறேன் என்று சொன்னார். பாஸ்போர்ட்டை புதுப்பிக்க மாட்டேன் என்கிறார்கள். தாயே என்றேன். அதுக்கென்ன விடுடா தம்பி பார்த்துக்கலாம் என்று சொன்னார். அவ்வளவுதான். ஆசீர்வாதம் செய்தார். கைலாசம் அமைந்தது. இதற்கு மேல் நான் என்ன சொல்வது.

கிரகமா
4 பேருக்கு ஆசீர்வாதம் பண்ணிட்டு கோவிலில் போய் உண்ட சோறு ஒரு கவளம் வாங்கி தின்றுவிட்டு அண்ணாமலையாரை பார்த்து நினைத்து வாழ்ந்து இறந்து போயிருப்பேன். என்னை ஏன் இவ்வளவு பெரிய ஆள் ஆக்கினீங்க. இது என் கிரகமா உங்க கிரகமா யாருக்கு தெரியும்.

தயிர் சோறு
திருவண்ணாமலையில் இருந்து பெங்களூருக்கு ஓடும் போது இவன் ஓடுகாலி பய. விட்டு விடுங்கடா என்று விட்டு இருந்தால் நான் அங்கே போய் வாழ்க்கையில் நிம்மதியாக இருந்திருப்பேன். கோவிலில் 2 உண்ட தயிர் சோறு வாங்கி தின்றுவிட்டு சிவனே என்று ஒரு மூலையில் படுத்திருந்து மிஞ்சி போனால் நாலைந்து சிஷ்யர்கள் இருந்திருப்பார்கள். ஒரு கார் இருந்திருக்கும். ஆனால் பெரிய ஆளாக்கிட்டீங்க என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications