ராஜ்யசபா தேர்தலில் சர்ப்ரைஸ் வைத்த பாஜக.. தேசிய தலைவர் நிதின் நபினுக்கு தேடி வரும் பொறுப்பு
டெல்லி: பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட உள்ளார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதேபோன்று பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ராஜ்யசபா எம்பி பதவி காலியிடங்களுக்கு வேட்பாளர்களை பாஜக தலைமை அறிவித்துள்ளது.
பாஜகவின் தேசிய தலைவராக கடந்த ஜனவரி மாதம் நிதின் நபீன் தேர்வு செய்யப்பட்டார். ஜேபி நட்டா பதவிக்காலம் நிறைவு பெற்றதை அடுத்து புதிய தேசிய தலைவராக தேர்வு செய்யபப்ட்டார் நிதின் நபின்.. பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்.

பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான அரசில் அமைச்சராக இருந்த நிதின் நபின், தேசிய தலைவராக நியமிக்கப்பட்டதும் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில், நிதின் நபின் ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட உள்ளார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பீகார் மாநிலத்தில் இருந்து அவர் எம்பியாக தேர்வு ஆக உள்ளார். பீகார் தலைநகர் பாட்னா மாவட்டத்தில் உள்ள பன்கிபுர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவாக இருக்கும் நிதின் நபின், எம்பியாக தேர்வு செய்யப்பட்டால் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருக்கும்.
இதனால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும். நாடு முழுவதும் காலியாக உள்ள 37 ராஜ்யபா எம்பி பதவிகளுக்கு வரும் 16 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 5 ஆம் தேதிக்குள் செய்ய வேண்டும்.
எனவே தற்போது பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ராஜ்யசபா எம்பி பதவி காலியிடங்களுக்கு வேட்பாளர்களை பாஜக தலைமை அறிவித்துள்ளது. அந்தவகையில், நிதின் நபின் மற்றும் சிவேஷ் குமார் (பீகார்),
தரேஷ் கோவாலா, ஜோகன் மோகன்(அஸ்ஸாம்), லட்சுமி வர்மா (சத்தீஷ்கர்), சஞ்சய் பாட்டியா (அரியானா), மன்மோகன் சமல், சுஜித் குமார்( ஒடிசா), ராகுல் சின்ஹா( மேற்கு வங்காளம்) என 9 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை பாஜக மேலிடம் வெளியிட்டுள்ளது.
பீகாரில் 5 இடங்களுக்கு ராஜ்யசபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக - ஜேடியூ கூட்டணிக்கு 4 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதில் ஐக்கிய ஜனதா தளம் இரண்டுஇடங்களிலும் பாஜக இடங்களிலும் போட்டியிடுகின்றன.
-
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை












Click it and Unblock the Notifications