PM போஸ்டா? CM சீட்டா? பாஜகவை பணிய வைத்த நிதிஷ்குமார்! ஆனாலும்.. நினைச்சதை முடிச்சுட்டாரே அமித்ஷா!
டெல்லி: பீகார் சட்டசபை தேர்தலில் வரலாற்று வெற்றியை பெற்ற நிலையில் 10வது முறையாக முதலமைச்சராக பதவியேற்க இருக்கிறார் நிதிஷ்குமார். பாஜக முதல்வர் பதவி கேட்பதாக தகவல் வெளியான நிலையில் நிதிஷ் குமாரே பதவி ஏற்பது உறுதியாகியிருக்கிறது. அதே நேரத்தில் ஜேடியுவை விட அதிக அமைச்சர் பதவிகளை கேட்டு பெற்றுள்ளது பாஜக. 6 எம்எல்ஏக்களுக்கு ஒரு அமைச்சர் என்ற முறையில் பாஜக எம்எல்ஏக்கள் 16 பேர் அமைச்சர்களாக தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றனர். ஜேடியூ தரப்பில் 14 பேரும், லோக் ஜனா சக்தி (ராம்விலாஸ்) கட்சியின் சார்பில் மூன்றுபேர் அமைச்சர்கள் பதவியேற்கலாம் என சொல்லப்படுகிறது. மேலும் பாஜக தரப்பில் இரண்டு துணை முதலமைச்சர் பதவிகளும் கேட்டு பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பீகார் சட்டசபை தேர்தல் முடிவில் ஜேடியூ - பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 202 இடங்களில் வென்ற அபார வெற்றியை ருசித்துள்ளது. எதிரணியான ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணியோ வெறும் 35 இடங்களையே பெற்றது.
இதனால், பிஹாரில் என்டிஏ அரசு அமைவது உறுதியான நிலையில்,, பதவியேற்பு விழாவுக்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன. தேர்தல் வெற்றிக்குப் பிறகு பாஜக மற்றும் ஜேடியு தலைவர்கள் பல்வேறு கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

பீகார் என்டிஏ அரசு
நேற்று பாட்னாவில் மத்திய அமைச்சர் நித்யானந்த ராய் உள்பட பாஜக உயர்நிலைத் தலைவர்கள் அனைவரும் நிதிஷ் குமாரை சந்தித்து விரிவான ஆலோசனையில் ஈடுபட்டனர். இதே நேரத்தில் மற்ற கூட்டணி கட்சிகளான லோக் ஜன சக்தி (ராம் விலாஸ்), இந்திய அவாம் மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகளும் அமைச்சர் பதவி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. மகராஷ்டிரா பாணியில் பீகாரில் அதிக இடங்களில் வென்றதால் பாஜக முதல்வர் பதவி கேட்டதாக தகவல் வெளியானது. ஆனால், பீகாரில் மிரட்டினால், மத்திய அரசுக்கு பிரச்சினை வரும் என்பதால், நிதிஷ்குமார் தான் முதல்வர் என பாஜகவும் சொல்லி விட்டது.
நிதீஷ் குமார் பதவியேற்பு
அதே நேரத்தில் ஜேடியூவை விட அதிக அமைச்சர் பதவிகளை பாஜக கேட்டுப் பெற்றுள்ளது. 6 எம்எல்ஏக்கருக்கு ஒரு அமைச்சர் என்ற முறையில் பாஜக எம்எல்ஏக்கள் 16 பேர் அமைச்சர்களாக தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றனர். ஜேடியூ தரப்பில் 14 பேரும், லோக் ஜனா சக்தி (ராம்விலாஸ்) கட்சியின் சார்பில் மூன்றுபேர் அமைச்சர்கள் பதவியேற்கலாம் என சொல்லப்படுகிறது. மேலும் பாஜக தரப்பில் இரண்டு துணை முதலமைச்சர் பதவிகளும் கேட்டு பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பீகார் அமைச்சரவை
குறிப்பாக துணை முதல்வர் பதவியைப் பற்றியும் தற்போது பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போதைய பாஜக துணை முதல்வர்களான சாம்ராட் சௌத்ரி, விஜய் குமார் சின்ஹா ஆகியோரில் ஒருவருக்கு மீண்டும் அந்த பொறுப்பு வழங்கப்படலாம். விஜய் குமார் சின்ஹாவுக்கு சபாநாயகர் பதவி வழங்கப்படவும் வாய்ப்பும் உள்ளது. மேலும், பாஜக மூத்த தலைவர்கள் ராம்கிருபால் யாதவ், மங்கள் பாண்டே, ரஜ்னீஷ் குமார் ஆகியோரில் ஒருவர் துணை முதல்வராக வரலாம் என பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.
பதவியேற்பு விழா
மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜன சக்தி (RV) சார்பிலும் துணை முதல்வர் பதவி வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், பாட்னாவின் காந்தி மைதானத்தில் நடைபெறும் அமைச்சரவை பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பல மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். பீகார் அரசியலில் முக்கிய நிகழ்ச்சியான இந்த விழா, என்டிஏவின் சமீபத்திய பெரிய வெற்றியை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யும் நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்











Click it and Unblock the Notifications