கைகோர்க்கும் நிதிஷ்.. பிரசாந்த் கிஷோர் வார்னிங்! சந்திரபாபு நாயுடுவுக்கு நடந்ததுதான்.. டோட்டலா காலி!
டெல்லி : 2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் அவரை விமர்சித்துள்ளார். 2019ல் சந்திரபாபு நாயுடுவுக்கு நடந்தது தான் நிதிஷ் குமாருக்கும் நடக்கும் என்று எச்சரித்துள்ளார் பிரசாந்த் கிஷோர்.
2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜகவுக்கு எதிரான வலுவான எதிரணியைக் கட்டமைக்கும் முயற்சிகளில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ் தலைமையில் வலுவான கூட்டணியை அமைக்க தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் முயன்று வருகிறார். சந்திரசேகர் ராவ், மூன்றாவது அணியைக் கட்டமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது.

இந்நிலையில், பீகார் முதலமைச்சரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் பல்வேறு கட்சி தலைவர்களை சந்தித்துப் பேசி வருகிறார். இந்த மாத தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். தொடர்ந்து, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து பேசினார்.
எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் நிதிஷ் : மேலும், இடதுசாரி தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்களை சந்தித்துப் பேசினார். இந்நிலையில், மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி மற்றும், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரை நிதிஷ் குமார் மற்றும் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் நேற்று நேரில் சந்தித்துப் பேசினர்.
மம்தா, அகிலேஷ் யாதவ் ஆகியோரைத் தொடர்ந்து ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், தெலுங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகரராவ் ஆகியோரையும் நிதிஷ்குமார் விரைவில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரையும் சந்திப்பதற்கான தேதி இன்னும் முடிவாகவில்லை என்றும் வெகு விரைவில் இந்தச் சந்திப்பு நடைபெறும் என்றும் ஐக்கிய ஜனதா தள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சந்திரபாபு நாயுடுவுக்கு நடந்ததுதான் : இந்நிலையில், தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது, ஆந்திர பிரதேசத்தின் அப்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க முயன்றார். எனினும், அதில் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. எம்.பி தேர்தலில் தெலுங்கு தேச எம்.பிக்களின் எண்ணிக்கை 3ஆக குறைந்தது. சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி 23 இடங்களில் மட்டுமே வென்றது.
சந்திரபாபு நாயுடு அப்போது பெரும்பான்மை அரசாங்கத்தை நடத்தி வந்தார். அவருக்கே இந்த நிலை. ஆனால் தற்போது நிதிஷ்குமார் தலைமையிலான பீகார் அரசு ஊனமுற்ற அரசாக முடங்கி போயுள்ளது. சந்திர பாபு நாயுடுவுக்கு நடந்தது தான் நிதிஷ் குமாருக்கும் நடக்கும். பீகாரை பற்றி முதலில் நிதிஷ் குமார் கவலைப்படட்டும்." எனக் கூறியுள்ளார்.
மேலும், தேஜஸ்வி யாதவ் முதல் அமைச்சரவை கூட்டத்தில் பேசும்போதே, 10 லட்சம் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என கூறினார். அவரால் அப்படி 10 லட்சம் வேலை வாய்ப்புகளை வழங்க முடியாது என்று அனைவருக்கும் தெரியும். தேஜஸ்வி லாலு பிரசாத்தின் மகனாக இல்லையென்றால், நாட்டில் அவருக்கு என்ன மதிப்பு இருந்திருக்கும்? என்றும் விமர்சித்துள்ளார் பிரசாந்த் கிஷோர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications