தலாய் லாமாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லாத ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி
டெல்லி: கால்வன் பள்ளத்தாக்கில் இருந்து சீனா படைகள் விலகிய நிலையில் திபெத் தலைவர் தலாய் லாமாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கவில்லை. சீனாவுடனான உறவில் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் சமிக்ஞையாக இது பார்க்கப்படுகிறது.
சுதந்திர நாடாக இருந்த திபெத்தை சீனா கைப்பற்றி தமது நாட்டுடன் இணைத்துக் கொண்டது. சீனாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடிய நிலையில் திபெத் தலைவராக இருந்த தலாய் லாமா 1959-ம் ஆண்டு இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான மக்களுடன் அகதிகளாக தஞ்சம் அடைந்தார்.

திபெத்தால் யுத்தம்
இந்தியாவில் தலாய் லாமாவுக்கும் திபெத்திய அகதிகளுக்கும் தாராளமான் உரிமைகளும் சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன. சொந்த நாட்டை விட மிகவும் சுதந்திரமாகவே அகதிகளாக இருந்த போதும் திபெத்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர். திபெத் ஆதரவு நிலைப்பாட்டால்தான் இந்தியா- சீனா யுத்தமே 1962-ல் மூண்டது.

திபெத் ஆதரவில் தளர்வு?
திபெத்தை தொடர்ந்து இந்தியா ஆதரித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக சீனாவுடனான நல்லுறவை வளர்க்கும் வகையில் முழுமையான திபெத் ஆதரவு போக்கை தளர்த்திக் கொண்டு வருகிறது மத்திய அரசு. கடந்த 2018-ம் ஆண்டு தலாய்லாமா இந்தியாவுக்கு வந்த 60-ம் ஆண்டு நிகழ்வுகளில் பாஜக தலைவர்களோ மத்திய, மாநில அரசு அதிகாரிகளோ பங்கேற்க வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தல் விடுத்திருந்தது.

இந்தியா சீனா உறவில் பதற்றம்
இந்தியாவுக்கு நேர் எதிராக நேபாளமோ, தலாய் லாமாவின் பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்கே தடை விதித்து சீனா விசுவாசத்தை காட்டியது. இந்த நிலையில் தலாய்லாமாவின் 85-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. தற்போது எல்லையில் சீனாவின் தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதனால் சீனாவுடனான இந்திய உறவில் பதற்றம் உருவாகி உள்ளது.

தலாய் லாமாவுக்கு வாழ்த்து இல்லை
அதே நேரத்தில் சீனாவுடனான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய கால்வன் பள்ளத்தாக்கில் இருந்து சீனா ராணுவம் பின்வாங்கியிருக்கிறது. இந்த பின்னணியில் தலாய் லாமாவின் பிறந்த நாளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவிக்கவில்லை. மத்திய அமைச்சர் கிரன் ரிஜ்ஜூ, டெல்லி துணை முதல்வர் சிசோடியா உள்ளிட்டோர் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சீனாவை எதிர்த்துக் கொண்டிருக்கும் தைவான் நாடும் தலாய்லாமாவின் பிறந்த நாளை கொண்டாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications