பணி நேரத்துக்கு பின் அலுவலக போன்கால் - இமெயிலுக்கு பதிலளிக்க வேண்டாம்! மசோதா தாக்கல்.. சட்டமாகுமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பணி நேரத்துக்கு பிறகும், விடுமுறை நாட்களிலும் அலுவலகத்தில் இருந்து வரும் போன்கால் மற்றும் இ-மெயிலுக்கு பதிலளிக்க வேண்டாம் என்பதை உறுதி செய்யும் தனிநபர் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேற்றி சட்டமாக்கப்படுமா? என்பது பற்றிய பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்ந்த கடந்த திங்கட்கிழமை (டிசம்பர் 1) தொடங்கியது. டிசம்பர் 19 ம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் மத்திய அரசு மொத்தம் 14 மசோதாக்களை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது.

no-calls-and-no-emails-after-work-what-ncp-mp-supriya-sule-introduces-right-to-disconnect-bill-2025

மத்திய அரசு சார்பில் புதிய சட்டத்தை இயற்றுவது மற்றும் ஏற்கனவே இருக்கும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றால் நாடாளுமன்றத்தின் இருசபைகளிலும் அதற்கான மசோதாக்கள் நிறைவேற்றப்பட வேண்டும்.

அதாவது மசோதாக்கள் லோக்சபா - ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்படும். அதன்பிறகு அந்த மசோதாக்கள் இருசபைகளிலும் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படும். அதன்பிறகு மசோதாக்கள் ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு அனுப்பி ஒப்புதல் பெற்று சட்டமாக்கப்படும். இந்த நாடளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அரசின் 14 மசோதாக்கள் மட்டுமின்றி எம்பிக்கள் தனிநபர் மசோதாக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் சரத்பவாரின் மகளும், தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) கட்சியின் எம்பியுமான சுப்ரியா சூலே நேற்று லோக்சபாவில் தனிநபர் மசோதா தாக்கல் செய்தார். அந்த மசோதாவின் "Right to Disconnect Bill, 2025" என்ற மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதாவை தமிழில் ‛துண்டிக்கும் உரிமை மசோதா 2025' என்று சொல்கிறார்கள்.

இந்த மசோதாவின் நோக்கம் என்பது ஊழியர்களின் நலன் சார்ந்தது. இந்த மசோதா ஒவ்வொரு ஊழியருக்கும், அலுவலக வேலை நேரத்திற்கு பிறகு அல்லது விடுமுறை நாட்களில் பணி தொடர்பான அழைப்புகள் மற்றும் இ-மெயில் உள்ளிட்டவற்றுக்கு பதிலளிக்க வேண்டாம் என்பதை உறுதி செய்யப்படும்.

இந்த மசோதா, லோக்சபா, ராஜ்யசபா உள்ளிட்டவற்றில் நிறைவேற்றப்பட வேண்டும். இது இருசபைகளிலும் நிறைவேற்றி ஜனாதிபதி திரெளபதி முர்முவின் ஒப்புதல் பெற்று சட்டமாக்கப்பட வேண்டும். அப்போது தான் இது சாத்தியாகும். ஆனால் லோக்சபா, ராஜ்யசபாவை எடுத்து கொண்டால் பெரும்பாலும் மத்திய அரசின் மசோதாக்கள் தான் நிறைவேற்றப்படும். தனிநபர் மசோதாக்கள் பெரும்பாலும் நிறைவேற்றப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+