டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரம்ஜான் நோன்பு.. அதிகாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு நடத்த முடியாது.. தேர்தல் ஆணையம் திட்டவட்டம்!

Google Oneindia Tamil News

டெல்லி: ரம்ஜான் நோன்பை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கே வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 4 கட்ட தேர்தல்கள் முடிவடைந்து விட்டன. இந்நிலையில், 51 தொகுதிகளில் 5-வது கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ரம்ஜான் நோன்பு தொடங்கவுள்ளதால் 7 மணிக்கு பதிலாக அதிகாலை 4 மணிக்கே வாக்குப்பதிவை தொடங்க வேண்டும் என டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் நிஜாமூதின் பாஷா டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

ஒட்டுக்காக ஒருவரை மரணப்படுக்கைக்கு தள்ளிவிட்டார் ராகுல் காந்தி... ஸ்மிருதி இராணி ஆவேசம் ஒட்டுக்காக ஒருவரை மரணப்படுக்கைக்கு தள்ளிவிட்டார் ராகுல் காந்தி... ஸ்மிருதி இராணி ஆவேசம்

வாக்குப்பதிவு நேரம்

வாக்குப்பதிவு நேரம்

அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வாக்குப்பதிவு நேரத்தை மாற்ற வாய்ப்பு இருக்கிறதா என தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டது.
ஆனால் அவரது கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.

தேர்தல் ஆணையம் விளக்கம்

தேர்தல் ஆணையம் விளக்கம்

இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் அளித்துள்ள விளக்கத்தில், எந்த குளறுபடியும் இல்லாமல் தேர்தலை நடத்தி முடிக்க இப்போதே தேர்தல் அதிகாரிகளுக்கு 15 முதல் 16 மணி நேரம் தேவைப்படுகிறது.

பூத் ஏஜென்டுகள் லேட்

பூத் ஏஜென்டுகள் லேட்

அதேபோல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகளும் 16 மணி நேரத்திற்கும் மேலாக பணியில் ஈடுபட வேண்டியுள்ளது. இந்நிலையில் காலை 4 மணிக்கே தேர்தலை தொடங்கினால், பூத் ஏஜென்டுகளும அந்நேரத்திலேயே வரவேண்டியிருக்கும். தற்போது 6 மணிக்கு வரவேண்டிய பூத் ஏஜென்டுகளே அந்நேரத்தில் வருவதில்லை.

நாளை முதல் நோன்பு

நாளை முதல் நோன்பு

மேலும் இன்னும் 2 கட்ட தேர்தல் மட்டுமே எஞ்சியுள்ளதால், நேரத்தை மாற்ற வாய்ப்பு இல்லை என தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் கடைபிடிக்கும் ரம்ஜான் நோன்பு நாளை தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
No change in poll timing Election commission says in Delhi high court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X