வீட்டுக்கு போக ஆசையாக இருந்தவர்களுக்கு ஷாக்.. தீபாவளி வாரத்தில் நோ லீவ்! TCS முடிவால் ஊழியர்கள் ஷாக்
டெல்லி: தீபாவளி வாரத்தில் விடுமுறை அளிக்க டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம் மறுத்துவிட்டதாக ஒரு ஊழியர் வெளியிட்ட பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த விவகாரம் இந்தியப் பணிச்சூழல் குறித்த விவாதங்களை மீண்டும் தூண்டியுள்ளது.
'ரெடிட்' சமூக வலைத்தளத்தின் 'r/IndianWorkplace' என்ற பிரிவில் இந்த ஊழியர் தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். இந்த முடிவு இனி வரும் காலங்களில் ஐடி நிறுவனங்கள் செயல்படும் விதத்தை குறிப்பதாக தெரிவித்துள்ளார். இது பணிச்சூழலில் நிலவும் toxic சுற்றுசூழல் எனக் குறிப்பிடப்பட்டு, டிசிஎஸ்-இல் தீபாவளி வாரத்தில் இனி விடுமுறைக்கு அனுமதி இல்லை என்று சொல்கிறார்கள்.. 1 நாள் விடுமுறைக்கு நாங்கள் எப்படி ஊருக்கு சென்றுவிட்டு திரும்ப முடியும் என்று கேட்டு உள்ளார்.

டிசிஎஸ் தீபாவளி விடுமுறை
அந்தப் பதிவில், "டிசிஎஸ் பணிசூழல் toxic ஆனது மட்டுமல்லாமல், கார்ப்பரேட் நிர்வாகச் சீர்கேட்டின் ஒரு அடையாளமாக.. அவமானமாக மாறி உள்ளது எங்கள் முதல் நிலை மேலாளர், தீபாவளி விடுமுறைக்கு இனி அனுமதி இல்லை என்று குழு சாத் பாக்ஸ் பெட்டியில் அறிவித்தார்.. தீபாவளி அன்று விடுமுறை எடுங்கள்.. ஆனால் அந்த வாரத்தில் முன்னும் பின்னும் விடுமுறை எடுக்க முடியாது என்று கூறியதாக தெரிவித்து உள்ளார்.
கிறிஸ்துமஸ் விடுமுறையுடன் ஒப்பிட்டு, "கிறிஸ்துமஸ் வரும்போது, டிசம்பர் மாதம் முழுவதும் ஒரு விடுமுறையாக மாறும். யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள். சர்வதேச அளவில் விடுமுறை தரப்படும் பண்டிகைகளுக்கு விடுமுறை தருகிறார்கள். அமெரிக்க கிளைண்டுகள் காரணமாக இந்த விடுமுறைகள் வழங்கப்படுகின்றன. ஆனால், இந்தியர்கள் அதே மரியாதையை எதிர்பார்க்கும்போது, அதைத் தடுக்கிறார்கள்" என்று அவர் விமர்சனம் வைத்துள்ளார்.
டிசிஎஸ் தீபாவளி சர்ச்சை
மேலாளர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது, அவர் விடுமுறை எடுக்கிறார். ஆனால் மற்றவர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், அவர்களை வேலைக்கு அழைக்கும் அளவுக்குத் தொந்தரவு செய்கிறார். இதனால் மற்ற குழு உறுப்பினர்கள் அவர்களின் வேலையைச் செய்ய வேண்டியுள்ளது இந்த முடிவு இனி வரும் காலங்களில் ஐடி நிறுவனங்கள் செயல்படும் விதத்தை குறிப்பதாக தெரிவித்துள்ளார். இது பணிச்சூழலில் நிலவும் toxic சுற்றுசூழல் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளார்.
டிசிஎஸ் பணி நீக்கம்
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) கடந்த மூன்று மாதங்களில் தனது ஊழியர்களின் எண்ணிக்கையை 6 லட்சத்திற்கும் கீழ் குறைத்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் அமெரிக்க வர்த்தகக் கொள்கைகளில் உள்ள நிச்சயமற்ற தன்மைகள் இந்திய ஐடி துறைக்கு பெரும் சவாலாக மாறியுள்ள நிலையில், இந்த அதிரடி பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 11, 2025 அன்று வெளியான தகவலின்படி, டிசிஎஸ் நிறுவனம் ஒரே காலாண்டில் 19,755 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இது கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக அதிகமான பணிநீக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, நிறுவனத்தின் மொத்த ஊழியர் பலம் 6 லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
டிசிஎஸ் நிறுவனம் பணி நீக்கம்
இந்த பணிநீக்க நடவடிக்கையில், தானாக முன்வந்து வெளியேறிய ஊழியர்களும், நேரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டவர்களும் அடங்குவர். கடந்த காலாண்டை விட இது 3.2% குறைவு. இந்த பணிநீக்கச் செலவுகளுக்காக டிசிஎஸ் நிறுவனம் ரூ.1,135 கோடி ஒதுக்கியுள்ளதாக அதன் சமீபத்திய வருவாய் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணி நீக்கத்திற்கு பின் 5 முக்கியமான விவாதங்கள் வைக்கப்படுகின்றன.
டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரி சுதீப் குண்ணுமால், ப்ளூம்பர்க் செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியில், இந்த மறுசீரமைப்பு பெரும்பாலும் நடுத்தர மற்றும் மூத்த நிலை ஊழியர்களை இலக்காகக் கொண்டுள்ளது எனக் கூறியுள்ளார். திறன் இல்லை மற்றும் தகுதிப் பொருத்தமின்மை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் விளக்கமளித்தார். டிசிஏ நிறுவனம் தனது உலகளாவிய ஊழியர்களில் 2 சதவீதத்தை மார்ச் 2026-க்குள் குறைக்க திட்டமிட்டுள்ளது. இதில் பாதி வேலைகள் முடிந்துவிட்டதாக அவர் தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவு மற்றும் தானியங்கி சேவைகளை நோக்கி நிறுவனம் நகர்வதன் ஒரு பகுதியாகவே இந்த மாற்றங்கள் நிகழ்வதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications