தேர்தல் முறைகேட்டை தடுக்க தேர்தல் ஆணையம் அதிரடி.. பட்டுவாடாவை தடுக்க 8 "முக்கிய" உத்தரவு
டெல்லி: ஓட்டுக்கு பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் செக் வைத்துள்ளது. இதுதொடர்பாக 8 முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி சூரியன் மறைந்த பிறகு வங்கி வாகனங்களில் பணம் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்தார்.
மேலும் லோக்சபா தேர்தல் தேதியையும் அறிவித்தார். ஏப்ரல் 19 ம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 7 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு ஒரே நாளில் அதாவது ஜுன் 4ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளத.

இந்நிலையில் தான் தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுபற்றி தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறியதாவது:
* தேர்தலின்போது வன்முறை நடப்பது, பணம் வழங்குவது சில மாநிலங்களில் உள்ளது. சமீபத்தில் நடந்த 11 மாநில சட்டசபை தேர்தல்களில் ரூ.3,400 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் தேர்தலில் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக நாடு முழுவதும், மாநிலங்கள் வாரியாகவும் செக்போஸ்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
* வாக்காளர்களுக்கு பணம், மதுபானம், குக்கர் உள்ளிட்ட இலவசங்கள் வழங்குவதை தடுக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை, போலீசாரிடம் அறிவுரை வழங்கி உள்ளோம்.
* வங்கிகளில் இருந்து பணம் வெளியே செல்வதை கண்காணிக்க உள்ளோம். சூரியன் மறைந்த பிறகு வங்கி வாகனங்களில் பணம் எடுத்து செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
* அனைத்து விமான நிலையங்களிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. ரயில் நிலையம், பஸ் நிலையம் மற்றும் ஹெலிகாப்டர் இறங்கும் இடங்களில் தேர்தல் அதிகாரிகள் தீவிர சோதனையை மேற்கொள்ள உள்ளனர்.
* மேலும் சட்டவிரோத ஆன்லைன் பணப்பரிமாற்றம் குறித்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத்துறைக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
* இதுமட்டுமின்றி எல்லைப்பகுதிகளில் ட்ரோன் மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
* பணப்பட்டுவாடா, பரிசு பொருட்கள் வினியோகம் உள்ளிட்ட தேர்தல் விதிமீறல்களை பொதுமக்கள் 1905 என்ற எண்ணில் கன்ட்ரோல் ரூமுக்கு போன் செய்து புகார் செய்யலாம். புகாரளிப்போரின் பெயர் வெளியிடப்படாது.
* அதோடு செல்போன் செயலியான சிவிஜில் cVigil செயலி மூலம் தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகார் அளித்தால் 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.












Click it and Unblock the Notifications