சொந்த வீடு கூட இல்லையாம்.. கடனில் பாஜக தேசிய தலைவர் நிதின் நபின்.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
டெல்லி: பாஜகவின் தேசிய தலைவராக ஜேபி நட்டாவுக்கு பதில் நிதின் நபின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பீகாரை சேர்ந்த நிதின் நபினுக்கு சொந்தமாக வீடு இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதோடு அவரது மொத்த சொத்து மதிப்பு குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
பாஜகவின் தேசிய தலைவராக ஜேபி நட்டா செயல்பட்டு வந்தார். கடந்த 2020ம் ஆண்டு முதல் அவர் அந்த பொறுப்பில் செயல்பட்டு வந்தார். தற்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக அவர் உள்ளார். பாஜகவின் தேசிய தலைவர் பதவி 2 ஆண்டுகளாகும். ஜேபி நட்டாவின் பதவிக்காலம் 2 முறை நீட்டிப்பு செய்யப்பட்டது.

இதையடுத்து புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டது. கடந்த 18 ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது. நேற்று வேட்பு மனு மீதான பரிசீலனை நடந்தது. பாஜகவின் தேசிய செயல் தலைவராக செயல்பட்ட நிதின் நபின் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதையடுத்து அவர் ஒரு மனதாக பாஜகவின் தேசிய தலைவராக இன்று தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து இன்று பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவராக செயல்பட்ட ஜேபி நட்டா, முன்னாள் தேசிய தலைவர்களான ராஜ்நாத் சிங், அமித்ஷா ஆகியோர் முன்னிலையில் நிதின் நபின் தேசிய தலைவராக பொறுப்பேற்றார். இவர் பாஜகவின் 12வது தேசிய தலைவர் ஆவார். அடுத்த 2 ஆண்டுகள் வரை நிதின் நபின் அந்த பொறுப்பில் இருப்பார்.
இவருக்கு வயது 45 தான். இதன்மூலம் பாஜகவின் தேசிய தலைவர் பொறுப்புக்கு குறைந்த வயதில் தேர்வான நபர் என்ற பெருமையை நிதின் நபின் பெற்றுள்ளார். நிதின் நபின் ராஞ்சியில் 1980ம் ஆண்டு மே 23ம் தேதி பிறந்தவர். அவரது தந்தை பெயர் நபின் கிசோர் பிரசாத் சின்ஹா. இவர் பாஜகவில் செயல்பட்டு வந்தார். பீகாரில் அவரது குடும்பம் வசித்து வந்தார். பீகார் தலைநகர் பாட்னா மேற்கு சட்டசபை தொகுதியில் பாஜக சார்பில் நிதின் நபினின் தந்தை நபின் கிசோர் பிரசாத் சின்ஹா எம்எல்ஏவாக இருந்தார். தந்தையை தொடர்ந்து நிதின் நபின் பாஜகவில் சேர்ந்து செயல்பட்டு வந்தார். இவரது மனைவி பெயர் தீப்மாலா ஸ்ரீவத்சவா. இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
நிதின் நபின் பீகாரில் 5 வது முறையாக எம்எல்ஏவாக உள்ளார். குறிப்பாக பங்கிப்பூர் சட்டசபை தொகுதியில் தொடர்ந்து 4வது முறையாக எம்எல்ஏவாக உள்ளார். சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் கூட பங்கிப்பூர் சட்டசபை தொகுதியில் ஆர்ஜேடி கட்சியின் வேட்பாளர் ரேகா குமாரியை 51 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நிதின் நபின் வீழ்த்தி வாகை சூடியிருந்தார். மேலும் நிதிஷ் குமார் அமைச்சரவையில் அமைச்சராகவும் பணியாற்றி இருந்தார்.
இந்நிலையில் தான் நிதின் நபினின் சொத்து மதிப்பு குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நிதின் நபினின் சொத்து மதிப்பு ரூ.3.08 கோடியாகும். பீகார் சட்டசபை தேர்தலின்போது நிதின் நபின் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதில் அவரிடம் 1.60 கோடி அசையும் சொத்து, ரூ.1.47 கோடிக்கு அசையா சொத்து இருப்பதாக தெரிவித்து இருந்தார்.
மேலும் மொத்தம் ரூ.56.6 லட்சம் கடன் இருப்பதாகவும் கூறியிருந்தார். மேலும் அவர் பல்வேறு வங்கி கணக்குகளில் ரூ.98.68 லட்சத்தை அவர் வங்கி மற்றும் நிதி நிறுவவனங்களில் டெபாசிட் செய்துள்ளதாகவும் ரூ.6.6 லட்சம் மதிப்பிலான பாண்ட்டுகள் மற்றும் பங்கு சந்தை முதலீடுகளை கொண்டுள்ளதாகவும் கூறியிருந்தார். அவரிடம் 2 கார்கள் உள்ளன. ஒன்று மஹிந்திரா ஸ்கோர்பியோ. இன்னொன்று டொயோட்டா இனோவா கிரிஸ்டா என்று கூறியிருந்தார். இதன் மார்க்கெட் மதிப்பு ரூ.37.8 லட்சம் என்று கூறியிருந்தார்.
நிதின் நபின் மற்றும் அவரது மனைவியிடம் ரூ.11.3 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.மேலும் நிதின் நபின் பெயரில் எந்த வீடும் இல்லை. மாறாக அவரது மனைவி பெயரில் ஜார்கண்ட்டின் துக்ரி பகுதியில் ரூ.29 லட்சம் மதிப்பிலும், பாட்னாவில் ரூ.1.18 கோடி மதிப்பிலும் தனித்தனி பிளாட் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. பிளாட் உள்ளதாக கூறப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்!












Click it and Unblock the Notifications