தமிழ்நாட்டிற்கு எதுவும் கொடுக்கவில்லை.. விவசாயிகளுக்கு திட்டங்களும் இல்லை.. திருச்சி சிவா விமர்சனம்
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எதுவும் கொடுக்கவில்லை என்று திருச்சி சிவா விமர்சித்துள்ளார்.
டெல்லி: விவசாயிகளையும், இளைஞர்களையும் பாதுகாக்க மத்திய பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டிற்காக எதுவும் கொடுக்கவில்லை என்று விமர்சித்த திருச்சி சிவா, தேர்தலை மையப்படுத்தியே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
2023-2024ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை 5வது முறையாக நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த மத்திய பட்ஜெட் குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் டெல்லியில் செய்தியாளர் சந்தித்து திமுக எம்பி திருச்சி சிவா கூறுகையில், இந்தியாவை வேலையில்லா திண்டாட்டம் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. 65% இளைஞர்களை கொண்டிருக்கும் இந்தியாவில், அவர்களுக்கு வேலைவாய்ப்புக்கு எந்த அறிவிப்புகளும் இல்லை.

நிதிநிலை அறிக்கை
அதேபோல் வேளாண் தொழில் இந்தியாவுக்கு மிக முக்கியம். இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், கொரோனா பரவலில் இருந்து இந்தியா மீண்டது பற்றியும், உலகளவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டதை இந்தியா சமாளித்தது பற்றி பேசினார். அதற்கு இரு காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று, இந்தியாவில் உணவு துறையில் தன்னிறைவு பெற்றிருப்பதற்கு பொதுத்துறை நிறுவனங்கள் தான் காரணம். ஆனால் அந்த வேளாண் தொழிலை பராமரிக்கவும், விவசாயிகளை பாதுகாக்கவும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

விவசாயிகள்
உணவுத்துறையில் நாம் தன்னிறைவு பெற்றிருப்பது அரசினால் அல்ல. இந்தியா இயல்பாகவே விவசாய நாடு. அதன் மூலம் பொருளாதாரமும் அதிகமாக இருக்கிறது. இந்தியாவில் அதிகமாக தருவது விவசாயமும், சிறு குறு தொழில்களும் தான். இவை இரண்டையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. விவசாயிகளுக்கு உற்பத்தி செலவு உயர்ந்து கொண்டு இருக்கிறது. அவர்களின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்பது பாஜகவின் தேர்தல் அறிக்கை.

தேர்தல்
கிட்டத்தட்ட பாஜகவின் ஆட்சி 8 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. அனேகமாக இதுதான் அவர்களின் கடைசி நிதி நிலை அறிக்கை. இந்த நேரத்தில் விவசாயிகளையோ, இளைஞர்களையோ பாதுகாக்க எந்த அறிவிப்பும் இல்லை. கர்நாடகாவுக்கு கொடுத்ததில் எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால் ஏன் தமிழ்நாட்டிற்கு சிறப்பு நிதியும் அறிவிக்கவில்லை. கர்நாடகாவிலும் தேர்தல் என்பதாலேயே சிறப்பு நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி, தேர்தலை மையமாக வைத்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

மானியங்கள் குறைப்பு
அதேபோல் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட திட்டத்திற்கு செலவு செய்தது மிகக்குறைவு. 100 நாள் வேலை திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்த நிதி, ஊட்டச்சத்திற்கு அடிப்படையாக தரப்படும் மானியம், உணவுத்துறை நிறுவனங்களுக்கான மானியம் குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏழைகள், அடிப்படை தேவையை நிறைவேற்ற முடியாமல் தவிப்பவர்கள் இருக்கிறார்கள், ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகள் இருக்கிறார்கள், பெண்கள் வாழ்வாதாரம் ஆகியவற்றை பற்றியே நிதிநிலை அறிக்கையில் பேச வேண்டும். ஆனால் அதனைப் பற்றி நிதிநிலை அறிக்கை பேசவில்லை.

வருமான வரி குறைப்பு
விவசாயிகளின் எந்த குரலும் கேட்கப்படவில்லை. அதேபோல் லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் கூட தனியாருக்கு விற்கப்படுகின்றன. இந்த அரசின் திட்டங்கள் தனியாருக்கு ஆதாயமாக இருக்கின்றன. வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடனில் பெரும்பகுதி பெருமுதலாளிளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. ஏழை, எளிய விவசாயிகளுக்கும், மாணவர்களுக்கும் சிறிய அளவே வழங்கப்படுகிறது. இந்த அரசு பொதுமக்களின் நலனில் கருத்தில் கொள்ளாமல் உள்ளது. சில அறிவிப்புகள் மக்களை கவர்வதை போல் இருக்கலாம். அது தேர்தலை கவனத்தில் கொண்டு அறிவிக்கப்பட்டவை. குறிப்பாக வருமான வரிக் குறைப்பு முகப்பூச்சு.

விலைவாசி
இந்த நிதிநிலை அறிக்கை இளைஞர்கள், விவசாயிகளை, சிறு குறு தொழில் முனைவோர்களை, ஏழைகளை, பெண்கள் குறைகளை தீர்க்கும் நிதிநிலை அறிக்கையாக இல்லை. இந்தியாவின் மொத்த வருமானத்தில் 40 சதவிகிதம் 1 சதவிதத்தினரால் கையாளப்படுகிறது. பொருளாதாரத்தில் 5வது இடம் என்று சொல்லும் போது கவர்ச்சியாக இருக்கும். சராசரி மக்களின் ஆடம்பர தேவையாக இருந்தவை, இன்று அடிப்படை தேவையாக மாறிவிட்டது. அவற்றின் விலையை கட்டுப்படுத்தும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அதனை இந்த அரசு செய்யவில்லை.

தமிழ்நாட்டிற்கு ஒன்றும் கொடுக்கவில்லை
தமிழ்நாட்டிற்கு என்று பட்ஜெட்டில் எதுவும் கொடுக்கவில்லை. மதுரை எய்ம்ஸ்-க்கு எந்த நிதி ஒதுக்கீடும் செய்யப்படவில்லை. ஏற்கனவே செவிலியர்கள் படிப்படை முடித்துவிட்டு வேலைவாய்ப்புக்கு கஷ்டங்களை சந்தித்து வரும் செவிலியர்களுக்கு கண்ணியமான ஊதியத்தில் வேலை கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
-
பியூஸ் கோயல் சொன்ன வார்த்தை.. இறங்கி வந்த அண்ணாமலை.. பாஜக வேட்பாளராக சம்மதம்? என்ன நடந்தது? -
"செந்தில் பாலாஜி கோவையில் போட்டியிட காரணம் இதுதான்" - பிரச்சாரத்தில் ஓப்பனாக சொன்ன முதல்வர் ஸ்டாலின் -
திமுக vs அதிமுக! கேம் சேஞ்சராக போகும் டாப் 5 வாக்குறுதிகள்! தேர்தல் முடிவையே மாற்றும் பிரம்மாஸ்திரம் -
பஞ்சாயத்து.. பிரசாரம்.. அனல் பறக்கும் 'கேப்டன்' கோட்டை! பிரேமலதா முடிவால் அப்செட்டில் உடன்பிறப்புகள் -
கோவை வடக்கு தொகுதியில் பாஜக கதை குளோஸ்.. சத்தமே இல்லாமல் வேலை பார்க்கும் வேலுமணி ஆதரவாளர் -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
இறுதியான பாஜக வேட்பாளர்கள் பட்டியல்.. பியூஷ் கோயல் ஆலோசனையில் நடந்தது என்ன? அண்ணாமலைக்கு வாய்ப்பு? -
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
சென்னையின் அடுத்த மேயர் நீங்கள் தானா? கேள்வி வந்ததும் திவ்யா சத்யராஜ் முகத்தில் அவ்வளவு சிரிப்பு! -
நாடியே அடங்கிடுச்சே.. அதிமுக கூட போட்ட டீலா? அண்ணாமலை எங்கே? நயினாரிடம் நறுக்கென்று கேட்ட பியூஸ்! -
தமன்னா வருவாங்களா சார்? சுந்தர்.சி களமிறக்க போகும் நட்சத்திர குரூப்! குஷ்பூவால் அடிக்கும் அதிர்ஷ்டம்












Click it and Unblock the Notifications