பிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை.. தேர்தல் ஆணையத்தை அணுகுங்கள்.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு!
பி.எம் நரேந்திர மோடி படத்திற்கு தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
Recommended Video

டெல்லி: பி.எம் நரேந்திர மோடி படத்திற்கு தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ஓமங் குமார் இயக்கத்தில் ''பிஎம் நரேந்திர மோடி'' படம் வெளியாக உள்ளது. இந்த படம் இப்போதே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் விவேக் ஓப்ராய் ஹீரோவாக நடிக்கிறார்.
இந்த படத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தேர்தல் நேரத்தில் இந்த படம் வெளியாவது விதிமுறை மீறல் என்று புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.

வழக்கு தொடுத்தனர்
ஏப்ரல் 12ம் தேதி இந்த படம் வெளியாகும் என்று நாள் குறிக்கப்பட்டது. இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர்கள் ஏற்கனவே வெளியாகிவிட்டது. டெல்லி ஹைகோர்ட்டில் இது தொடர்பாக பல்வேறு மனுதாரர்கள் சார்பாக பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது.

தள்ளுபடி
தேர்தல் நேரத்தில் இப்படி படம் எடுப்பது விதிமுறை மீறல் என்று வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு டெல்லி ஹைகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக மேல்முறையீடு செய்யப்பட்டது.

இன்று தீர்ப்பு
இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. அதன்படி பி.எம் நரேந்திர மோடி படத்திற்கு தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஏற்கனவே சென்சார் போர்ட் அனுமதி வழங்கிவிட்டதால் இதற்கு தடை விதிக்க முடியாது என்று கூறியுள்ளது.

என்ன
அதே சமயம் இதை தேர்தல் விதிமுறை மீறல் என்றும் சொல்ல முடியாது. அதனால் தேர்தல் ஆணையத்தில் இதுகுறித்து புகார் அளிக்கலாம். படத்திற்கு தடை விதிப்பது குறித்து தேர்தல் ஆணையமே முடிவு செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications