பரிசு பொருட்களை ஏலம் விட்ட பிரதமர் மோடி.. ஆர்வம் காட்டாத மக்கள்.. பெரும்பாலான பொருட்கள் விற்கவில்லை!
டெல்லி: பிரதமர் நரேந்திரமோடிக்கு வந்த பரிசுப் பொருட்களை ஏலம் விடப்பட்ட நிலையில் அவற்றை வாங்குவதற்கு யாரும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.
Recommended Video
நேற்று மாலை நிலவரப்படி 162 பொருட்களை யாருமே வாங்குவதற்கு முன்வரவில்லை என்று ஏலம் விட்டுள்ள இணையதளத்தில் உள்ள தகவல் தெரிவிக்கிறது.
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பி.வி. சிந்து பேட்மிண்டன் ராக்கெட் ரூ.80 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்புடன் நிற்கும் வகையிலான ஓவியம் 3.5 லட்சம் ரூபாய்க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த பிரபல பொருட்கள் உட்பட 162 பொருட்கள் ஏலத்தில் வாங்கப்படவேயில்லை.

ஏலத்தில் கேட்கவில்லை
pmmementos.go.in என்ற வெப்சைட் மூலமாக பொருட்கள் ஏலத்தில் விடப்படுகின்றன. 1,348 பொருட்கள் ஏலம் போகாமல் உள்ளன என்று அந்த வெப்சைட் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை 1,083 பொருட்கள் இந்த வெப்சைட் மூலமாக ஏலத்தில் விடப்பட்டு உள்ளன என்று கலாச்சாரத் துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

என்ன பொருட்கள்
இந்திய டோக்கியோ 2020 ஒலிம்பிக் குழு கையெழுத்திட்ட ஆடை (90 லட்சம்), வெண்கலப் பதக்கம் வென்ற லோவ்லினா போரோகெய்னின் குத்துச்சண்டை கையுறைகள் (80 லட்சம்) மற்றும் ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி அணிகளால் கையொப்பமிடப்பட்ட ஹாக்கி குச்சிகள் (ஒவ்வொன்றும் 80 லட்சம்) இன்னும் ஏலம் பெறப்படவில்லை. அடிப்படை விலையில் ₹ 5,000 முதல் 90 லட்சம் வரை ஏலம் பெறாத பொருட்களில், பல ஆடைகள் மற்றும் உருவப்படங்கள் உள்ளன, இதில் மோடி தனது தாயுடன் இருக்கும் புகைப்படமும் ஏலத்தில் போகவில்லை.

போலியான ஏலம்
இந்த பொருட்களில் பல பல கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டதாக முதலில் தகவல்கள் வெளியாகி இருந்தன ஆனால் அவ்வாறு ஏலம் எடுப்பதாக கூறியவர்களின் பின்புலத்தை விசாரித்தபோது அவை போலியானவை என்பது தெரிய வந்தன என்கிறார்கள் அதிகாரிகள். பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் தேதி முதல் இந்த ஏழும் துவங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கங்கையை சுத்தப்படுத்த நிதி
அதேநேரம் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா வீசிய அந்த ஈட்டி ஒரு கோடி ரூபாய்க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் அதை ஒரு கோடியே 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்குவதற்கு இரண்டு பேர் போட்டி போட்டு வருவது வருகிறார்கள் என்பது மகிழ்ச்சியான செய்தியாகும். இது பிரதமர் மோடியிடம் நீரஜ் சோப்ரா வழங்கிய கையொப்பமிடப்பட்ட ஈட்டி என்று இணையதளம் கூறுகிறது. தொடக்க நாளில் (அக்டோபர் 4) ஈட்டிக்கு அதிகபட்சமாக ₹ 10 கோடி ஏலம் கேட்டனர். ஆனால் அது போலி ஏலமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பின்னர் ரத்து செய்யப்பட்டது. இன்று மாலை வரை இந்த ஏலம் தொடரப் போகிறது பிரதமர் நரேந்திர மோடி தனக்கு வந்த பரிசுப் பொருட்களை ஏலத்தில் விடுவது இது மூன்றாவது முறை. இதில் கிடைக்கும் பணத்தை கங்கையை சுத்தப்படுத்தும் பணிகளுக்காக பயன்படுத்த உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது நினைவிலிருக்கலாம்.












Click it and Unblock the Notifications