மக்களே பீதி வேண்டாம்.. இந்தியாவிற்கு சுனாமி ஆபத்து இல்லை! அறிவித்த அறிவியல் மையம்
டெல்லி: ரஷ்யாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக திடீர் சுனாமி ஏற்பட்டுள்ளது. ரஷ்யா மட்டுமின்றி ஜப்பானிலும் சுனாமி தாக்கி உள்ள. பசிபிக் தீவுகள் மற்றும் அமெரிக்கா முழுவதும் சுனாமி வார்னிங் விடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவில் இன்று காலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரஷ்யாவின் கம்சட்காவின் கிழக்கு கடற்கரையில் இன்று அதிகாலையில் 8.8 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவானது.

இந்த நிலநடுக்கம் காரணமாக வீடுகள் குலுங்கின. வீட்டில் இருந்த பொருட்கள் விழுந்தன. சில இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதனால் பொதுமக்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்தனர்.
ரஷ்யா வரலாற்றில் 70 ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச நிலநடுக்கமாக இது பதிவு செய்யப்பட்டது.இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ரஷ்யாவை சுனாமி தாக்கியது. ரஷ்யாவின் குரில் தீவுகள் மற்றும் ஜப்பானின் பெரிய வடக்கு தீவான ஹெக்கைடோவின் கடலோர பகுதிகளை சுனாமி பேரலைகள் தாக்கின.
ரஷ்யா - ஜப்பான் மட்டுமின்றி பசிபிக் தீவுகள் மற்றும் அமெரிக்காவின் கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் கடலோர பகுதிகளில் உள்ள மக்கள் அவசரஅவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் நம் நாட்டுக்கும் சுனாமி பாதிப்பு வருமா? என்ற பீதி ஏற்பட்டது. ஆனால் நம் நாட்டுக்கு எந்த சுனாமி அச்சுறுத்தலும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் (INCOIS) தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛இந்த நிலநடுக்கம் தொடர்பாக இந்தியாவிற்கும் இந்திய பெருங்கடலுக்கும் எந்த சுனாமி அச்சுறுத்தலும் இல்லை. முன்னதாக சுனாமி எச்சரிக்கை மையம் சார்பில் இன்று அதிகாலை 4.54 மணிக்கு கம்சட்காவின் கிழக்கு கடற்கரையில் 8.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி இருந்தது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுஒருபுறம் இருக்க அண்டை நாடான சீனாவிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீனாவின் சுனாமி எச்சரிக்கை மையம் தரப்பில், ‛‛தேசிய வள அமைச்சகத்தின் சுனாமி அறிவுரை மையம் சார்பில் சமீபத்திய எச்சரிக்கை மற்றும் பகுப்பாய்வு முடிவுகள் ஆராயப்பட்டன. அதன்படிசீனாவின் சில கடலோர பகுதிகளிலும் சேதம் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது'' என சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications