"பிரதமர் பதவி காலியாக இல்லை".. எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் நிதிஷ்குமார் மீது பாஜக பொளேர் அட்டாக்
டெல்லி: நாட்டில் பிரதமர் பதவி காலியாக இல்லை.. இதுதான் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து வரும் பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கான பதில் என்கிறது பாஜக.
2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்காக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சிகளை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மேற்கொண்டு வருகிறார். நிதிஷ்குமாருடன் ஆர்ஜேடி தலைவரும் பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவும் இணைந்துள்ளார்.

டெல்லியில் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரை அண்மையில் சந்தித்து பேசினார் நிதிஷ்குமார். இதன் ஒரு பகுதியாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரை நிதிஷ்குமாரும் தேஜஸ்வி யாதவும் சந்தித்தனர். இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மமதா பானர்ஜி, பாஜகவை ஜீரோவாக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைய வேண்டும் என வலியுறுத்தினார்.
இதேபோல் அகிலேஷ் யாதவையும் சந்தித்து பேசினர் நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவ். அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், தாம் பிரதமர் வேட்பாளர் இல்லை; அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைப்பதுதான் தமது பணி என திட்டவட்டமாக கூறியிருந்தார் நிதிஷ்குமார்.
இது தொடர்பாக பாஜக மூத்த தலைவரான முன்னாள் மத்திய அமைச்சர் ஷாநவாஸ் ஹுசைன் கூறியதாவது: பீகாரில் பாஜகவின் ஆதரவுடன் முதல்வரானவர் நிதிஷ்குமார். பீகார் சட்டசபையில் நிதிஷ்குமாரின் ஜேடியூவுக்கு 3-வது இடம்தான். ஆனால் நிதிஷ்குமாரோ இந்த தேசத்தின் பிரதமராக வேண்டும் என கனவு காண்கிறார்.
நிதிஷ்குமாருக்கு ஒரு விஷயம் நன்றாக தெரியும். இந்தியாவில் இப்போதைக்கு பிரதமர் பதவி காலியாக இல்லை என்பதுதான் அது. அப்படியான நிலையில் நான் பிரதமர் வேட்பாளரே இல்லை என ஏன் திரும்ப திரும்ப நிதிஷ்குமார் கூறி வருகிறார். இவ்வாறு ஷாநவாஸ் ஹூசைன் கூறினார்.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications