முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு ஓட்டு இல்ல.. தலைநகர் டெல்லி இல்ல! வர்ணாசிரம ஆட்சி -இந்து தேச வரைவு
டெல்லி: இந்தியாவை இந்து தேசமாக அறிவிக்கக்கோரி இந்து ராஷ்டிர அரசியலமைப்பு வரைவை இந்துமத துறவிகள் மற்றும் அறிஞர்கள் குழுவை சேர்ந்தவர்கள் வெளியிட்டு இருக்கிறார்கள்.
இந்தியாவை இந்து ராஷ்டிராவாக அறிவித்து பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பூடான், நேபாளம், வங்கதேசம், மியான்மர் உள்ளிட்ட நாடுகளை ஒரே நாடாக அறிவித்து அகண்ட பாரதம் அமைக்க வேண்டும் என இந்துத்துவா தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர்.
இந்தியாவை இந்து ராஷ்டிராவாக அறிவிக்க வேண்டும் என பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்களும் பல தருணங்களில் பேசி இருக்கிறார்கள். அரியானா மாநில பாஜக எம்எல்ஏ கோயல் இந்து ராஷ்டிரம் அமைப்பேன் என்று உறுதிமொழி எடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இனப்படுகொலை
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தும் இந்தியா ஓர் இந்து தேசம் என்றும், அது குறித்த விவாதத்திற்கே இடமில்லை என்றும் தெரிவித்தார். கடந்த ஆண்டு உத்தராகண்ட் மாநிலம் ஹரிதுவாரில் நடைபெற்ற தர்ம சன்சாத் சாமியார்கள் மாநாட்டிலும் இதே கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்வதற்கு தயாராக வேண்டும் என்றும் அந்த மாநாட்டில் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்து ராஷ்டிரம்
இந்த நிலையில் இந்து மத துறவிகள், வழக்கறிஞர்கள், அரசியல் அறிஞர்கள் ஒன்றிணைந்து இந்து ராஷ்டிரத்துக்கான (இந்து நாடு) அரசியலமைப்பு வரைவை தயாரித்து இருக்கிறார்கள். இந்த இந்து ராஷ்டிர அரசியலமைப்பு வரைவினை வெளியிட்டு இருக்கும் குழுவினர் இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.

வாக்களிக்கும் உரிமை
இந்த அரசியலமைப்பு வரைவில் இடம்பெற்று இருக்கும் முக்கிய அம்சங்கள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. பலரும் இதற்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்தியா இந்து ராஷ்டிரமாக அறிவிக்கப்பட்டால் இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்படாது என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்து ராஷ்டிரத்தின் தலைநகர்
இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் சாதாரண மக்களாக வாழலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் இந்து ராஷ்டிரத்தின் தலைநகராக டெல்லி இருக்காது என்றும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஆன்மீக நகரான வாரணாசியே இந்தியாவின் தலைநகர் எனவும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

வர்ணாசிரம் தர்ம ஆட்சி
மேலும், ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்ட சட்டங்கள் அகற்றப்பட்டு வர்ணாசிரம தர்மப்படி இந்து ராஷ்டிரத்தில் ஆட்சி நடக்கும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. வரும் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வாரணாசியில் இந்து மத அமைப்புகள் நடத்தும் தர்ம சன்சாத் கூட்டத்தில் இந்த அறிக்கையை வெளியிட்டு விரிவாக விவாரிக்கவும், மக்களிடம் கருத்து கேட்கவும் முடிவு செய்து இருக்கிறார்.
-
"AI தயாரித்த ரிப்போர்ட் போல உள்ளது.." கீழடி அறிக்கையை திருத்த சொன்ன மத்திய அரசுக்கு அமர்நாத் பதிலடி -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications