Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சமோசா - ஜிலேபி - லட்டுக்கு தடையா? இணையதளங்களில் பரவும் தகவல்.. மத்திய அரசு விளக்கம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் சிகரெட் பாக்கெட்டுகளில் எச்சரிக்கை வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சமோசா, ஜிலேபி பாக்கெட்டுகளிலும் எச்சரிக்கை வாசகம் இடம்பெற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், சமோசா, ஜிலேபி, லட்டு உள்ளிட்டடவை உடலுக்கு ஆபத்தான உணவு பட்டியலில் மத்திய அரசு சேர்க்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தான் மத்திய அரசு அதுதொடர்பாக முக்கிய விளக்கம் அளித்துள்ளது.

தற்போது நம் நாட்டில் இதய பிரச்சனை, உடல் பருமன் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்டவை அதிகரித்து வருகிறது. இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு பலரும் மரணமடைகின்றனர். அதேபோல் உடல் பருமன் பலருக்கும் பெரும் பிரச்சனையாக மாறி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் எண்ணெய் மற்றும் இனிப்புகளை அதிகம் சாப்பிடுவது தான் என்று சொல்லப்படுகிறது.

no-warning-labels-will-be-put-on-indian-snacks-like-samosa-laddus-and-jalebi-says-health-ministry

இதற்கிடையே தான் சில நாட்களுக்கு முன்பு நாக்பூர் எய்ம்ஸ் உள்பட மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து மருத்துவமனைகளிலும் உணவுப் பொருட்களில் இருக்கும் எண்ணெய் மற்றும் சர்க்கரை அளவுகளைப் பட்டியலிட்டு பலகைகள் வைக்க மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டது.

இதையடுத்து சமோசா, ஜிலேபி உள்ளிட்டவை உடலுக்கு தீங்கானது. இதன் பாக்கெட்டுகளின் மீது சிகரெட் பாக்கெட்டில் இருப்பது போல் எச்சரிக்கை வாசகங்களை இடம்பெற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் பரவின. அதுமட்டுமின்றி விரைவில் சமோசா, ஜிலேபி ஆகியவை சுகாதார எச்சரிக்கை பட்டியலில் சேரலாம் என்று செய்திகள் வெளியாகின. இதனை பயன்படுத்தி சிலர் சமூக வலைதளங்களில் சமோசா, ஜிலேபி உள்ளிட்டவை விரைவில் தடை செய்யப்பட உள்ளதாக தவகல்களை பரப்பினர். இது விவாதத்தை கிளப்பியது.

இந்நிலையில் தான் தற்போது மத்திய சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், ‛‛ இந்தியன் ஸ்நாக்ஸ்களான சமோசா, ஜிலேபி மற்றும் லட்டு உள்ளிட்டிவற்றின் மீது வார்னிங் லேபிள் வைக்கப்பட வேண்டும் என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. தெருவோரங்களில் விற்பனை செய்யப்படும் ஸ்நாக்ஸ்களை குறிவைத்தோ அல்லது சமோசா, ஜிலேபி மற்றும் லட்டு உள்ளிட்டவற்றின் மீது வார்னிங் மெசேஜ் பொறிக்கப்பட வேண்டும் என்பதற்கான நடவடிக்கையில் மேற்கொண்டது இல்லை.

மாறாக சமீபத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பொது சுகாதாரத்துக்கான அறிவுரைகளை வழங்கியது. இந்த அறிவுரை என்பது மக்கள் உடல் நலத்தை பாதிக்காத உணவு பொருட்களை சாப்பிட வேண்டும் என்பதை தான் நோக்கமாக கொண்டது. இந்த நடவடிக்கை தேசிய தொற்றா நோய் கட்டுப்படுத்துவதை அடிப்படையாக கொண்டது.

அதன்படி அலுவலக லாபிஸ், கேபிடெரியாஸ் மற்றும் மீட்டிங் அறைகளில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவு பொருட்களில் இருக்கும் சர்க்கரை, கொழுப்பு உள்ளிட்டவை பற்றிய விவரங்களை பலகையில் இடம்பெற செய்ய வேண்டும் என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டது. பல உணவு பொருட்களில் இந்த பொருட்களின் அளவு மறைந்துள்ளது. இதனால் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதோடு குறிப்பிட்டு எந்த பொருட்களின் பெயர்களையும் குறிப்பிட்டு இந்த அறிவுரை வழங்கப்படவில்லை.

அதோடு பலகைகளில் படிக்கட்டுகளை பயன்படுத்துதல், அவ்வப்போது நடப்பது, உடலுக்கு வலுசேர்க்கும் உணவுகளான பழங்கள், காய்கறிகள் மற்றும் குறைந்த அளவில் கொழுப்பு உள்ள உணவுகள் பற்றி தகவல் அளிக்க கூறினோம் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சமோசா, லட்டு மற்றும் ஜிலேபி மீது எச்சரிக்கை வாசகங்கள் எதுவும் இடம்பெறாது எனவும், அந்த உணவுகள் தடை செய்யும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+