தொழிலாளர் போராட்டத்தில் பாகிஸ்தான் சதி? நொய்டாவில் 40,000 பேர் திரண்ட போராட்டம்.. 300+ பேர் கைது
டெல்லி: இந்தியாவின் தொழில் மையங்களில் ஒன்றான நொய்டா, கடந்த திங்கட்கிழமை ஒரு போர்க்களமாகவே மாறியது. வெறும் சம்பள உயர்வுக்கான போராட்டமாகத் தொடங்கி, வன்முறை, தீவைப்பு, கைது எனப் பெரும் கலவரத்தில் முடிந்துள்ளது இந்தச் சம்பவம். சுமார் 40,000 தொழிற்சாலை தொழிலாளர்கள் வீதியில் இறங்கியதால் ஒட்டுமொத்த நகரமே ஸ்தம்பித்தது.
நமது தேசிய தலைநகர் பகுதிக்கு உட்படப் பகுதி தான் நொய்டா.. உத்தரப் பிரதேச மாநிலத்திற்குள் வந்தாலும் இது என்சிஆர் எனப்படும் தேசிய தலைநகர் பகுதிக்குள் வரும். இந்த நொய்டா நாட்டின் மிக முக்கியமான தொழிற்சாலை ஹப் ஆக இருக்கிறது. இதற்கிடையே இந்த நொய்டாவின் ஃபேஸ்-2 மற்றும் செக்டார் 63 உள்ளிட்ட சுமார் 80 இடங்களில் திடீரென போராட்டங்கள் வெடித்தன.

போராட்டம்
அமைதியாகத் தொடங்கிய போராட்டம், திடீரென வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்கள் வாகனங்களுக்கும், சொத்துகளுக்கும் தீ வைத்தனர். போலீஸார் மீது சரமாரியாகக் கற்கள் வீசப்பட்டன. வன்முறை தொடர்பாக 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
100-க்கும் மேற்பட்டோர் விசாரணைக்காகக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணையை நடத்தி வருகிறார்கள். தொழில்துறையினரைத் தவிர வேறு யாராவது ஊடுருவினார்களா என்பது தொடர்பாகவும் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். இது குறித்து காவலர்கள் கூறுகையில், "சம்பள உயர்வு கேட்டு முதலில் தொழிலாளர்கள் அமைதியான முறையிலேயே போராட்டத்தை நடத்தினர். தொழிலாளர்கள் கலைந்து சென்ற பிறகு, வெளியூர்களில் இருந்து வந்த ஒரு கும்பல் தான் வன்முறையைத் தூண்டிவிட்டது. அவர்களைக் கண்டறிந்து வருகிறோம்" என்றார்.
ஏன் இந்தப் போராட்டம்?
இந்தப் போராட்டத்திற்குத் தூண்டுகோலாக அமைந்தது அண்டை மாநிலமான ஹரியானா அரசின் ஒரு முடிவுதான். ஹரியானா அரசு தனது மாநிலத் தொழிலாளர்களுக்கு 35% சம்பள உயர்வை அறிவித்தது. ஹரியானாவில் சம்பளம் உயரும்போது, எங்களுக்கு மட்டும் ஏன் குறைவான சம்பளம்? என்பதுதான் உபி மாநிலம் நொய்டா தொழிலாளர்களின் கேள்வியாக உள்ளது.
12 மணிநேரம் வேலை செய்தும் ரூ.11,000 முதல் ரூ.15,000 வரை மட்டுமே கிடைப்பதாகவும், விலைவாசி உயர்வால் குடும்பம் நடத்த முடியவில்லை என்றும் தொழிலாளர்கள் குமுறுகின்றனர். ஒரு ஷிப்ட் சம்பளத்தைக் கொடுத்துவிட்டு, இரண்டு ஷிப்ட் வேலையை வாங்குவதாகத் தொழிலாளர்கள் தரப்பில் பகீர் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் ஒட்டுமொத்த நொய்டாவிலும் பரபரப்பு நிலவுகிறது.
பாகிஸ்தான் சதி?
இதற்கிடையே இந்த விவகாரத்தில் உத்திர பிரதேச தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அனில் ராஜ்பார் கிளப்பியுள்ள 'சதி' புகார் அரசியல் வட்டாரத்தை அதிர வைத்துள்ளது. இது தொடர்பாக அவர், "சமீபத்தில் மீரட் மற்றும் நொய்டாவில் பிடிபட்ட பயங்கரவாதிகளுக்குப் பாகிஸ்தானுடன் தொடர்பு இருந்தது. இந்தத் தொழிலாளர் போராட்டத்தின் பின்னணியிலும் பாகிஸ்தான் சதி இருக்கலாம் எனச் சந்தேகிக்கிறோம். மாநிலத்தின் வளர்ச்சியைச் சீர்குலைக்கத் திட்டமிட்டே இந்த வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார். முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் நிகழ்ச்சியைச் சீர்குலைக்க 'தேச விரோத சக்திகள்' முயன்றதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
யோகி ஆதித்யநாத்
இது அங்கு அரசியல் அரங்கிலும் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. இது தொடர்பாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், "அரசு தொழிலாளர்கள் பக்கம் நிற்கிறது. வன்முறையைத் தூண்டுபவர்களின் வலையில் விழ வேண்டாம். தொழில்முனைவோருக்கும் தொழிலாளர்களுக்கும் ஒருசேரப் பாதுகாப்பு வழங்கப்படும்" என்றார். அதேநேரம் எதிர்க்கட்சி தலைவரான அகிலேஷ் யாதவ், பாஜகவைச் சாடியுள்ளார். அவர் இது தொடர்பாக, "பாஜக அரசு தொழிலதிபர்களுக்குச் சாதகமாகச் செயல்படுகிறது. நொய்டாவைத் தொழிலதிபர்களுக்கான 'ஏடிஎம்' ஆக மாற்றியதன் விளைவுதான் இந்தத் தொழிலாளர்களின் கொந்தளிப்பு" என விமர்சித்துள்ளார்.
உத்தரப்பிரதேச அரசு தற்போது நொய்டாவில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இப்போது தான் அங்கு நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது. மேலும், தொழிலாளர்களின் கோரிக்கையை ஆராய ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
-
"எல்லை மீறி போறீங்க.." டெல்லி சாலைகளில் ஓடும் டிரம்ப் ஆட்டோக்கள்.. அப்படி என்ன காரணம் தெரியுமா? -
நீ கைய குடு பங்கு! அமெரிக்கா முட்டி மோத.. சத்தமில்லாமல் இந்தியா பார்த்த வேலை! தோள் கொடுத்த ரஷ்யா! -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம்












Click it and Unblock the Notifications