டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நோ.. இந்தியாவில் மத மோதல்கள் நடக்கவேயில்லை.. ஐரோப்பிய தூது குழுவிடம் அடித்து சொன்ன முக்தார் அப்பாஸ்

மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி பேட்டி தந்துள்ளார்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் இந்த 8 வருடங்களில், பெரிய அளவுக்கு மதக்கலவரங்கள் எதுவும் நடைபெறவில்லை என்று ஐரோப்பிய நாடுகள் குழுவிடம், மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த தூதுக் குழு ஒன்று இந்தியாவுக்கு வந்திருக்கிறார்கள்.. ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த இந்த 6 உறுப்பினர்கள் கொண்ட குழுவினர், மனித உரிமைகளுக்கான பிரதிநிதி எமான் கில்மோர், இந்தியாவுக்கான ஐரோப்பிய நாடுகளின் தூதர் உகோ அஸ்டுடோ ஆகியோர் தலைமையில், மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியை டெல்லியில் சந்தித்து பேசினார்கள்.

குறிப்பாக, நாட்டில் சிறுபான்மையினர் மீதான பாகுபாடு குறித்து எழுந்துள்ள புகார்களை பற்றி இவர்கள் பேசியுள்ளனர்.. அதற்கு மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி பல்வேறு விளக்கங்களை தந்துள்ளார்.

6 வருடங்களுக்கு பிறகு.. பிரதமர் தலைமையில் இன்று நடக்கிறது.. மாநில முதலமைச்சர்கள் மாநாடு.. டெல்லியில்6 வருடங்களுக்கு பிறகு.. பிரதமர் தலைமையில் இன்று நடக்கிறது.. மாநில முதலமைச்சர்கள் மாநாடு.. டெல்லியில்

ஐரோப்பிய ஒன்றிய தூது குழு

ஐரோப்பிய ஒன்றிய தூது குழு

அதாவது, இந்தியாவில் மனித உரிமைகள் நிலவரம், சிறுபான்மையினர் நிலவரம் குறித்தும் அவர்களுக்கு எதிரான வெறுப்பு அதிகரித்து வருவதாகவும், சமீபத்தில் நடந்த கலவரங்கள் குறித்தும் தங்கள் கவலையை ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக் குழுவானது, மத்திய அரசிடம் வெளிப்படுத்தி உள்ளது. அதற்கு மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, இந்தியாவில் அப்படி எந்தவிதமான சிறுபான்மையினருக்கு எதிராக பாகுபாடுகள் நிகழ்வதில்லை என்று தெரிவித்துள்ளார்.

பொருளாதாரம்

பொருளாதாரம்

கடந்த 2014ம் ஆண்டு மத்திய அரசு பணிகளில் சுமார் 4 சதவிகிதத்திற்கும் குறைவாக இருந்த சிறுபான்மை பிரதிநிதித்துவமானது, தற்போதைய மோடி அரசில் 10 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.. இந்த சந்திப்புக்கு பிறகு, செய்தியாளர்களிடம் முக்தார் அப்பாஸ் நக்வி சொன்னதாவது: "ஐரோப்பிய நாடுகளின் குழுவுடன் சந்திப்பு நடத்தப்பட்டது.. அனைத்து சமுதாயத்தினரின் சமூக பொருளாதாரம் மற்றும் கல்வியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது குறித்து அவர்களிடம் விரிவாக எடுத்து கூறினேன்..

சாதி, மதம்

சாதி, மதம்

ஆனால், சிறுபான்மையினருக்கு எதிரான மதகலவரம் பற்றி அவர்கள் கவலையை வெளிப்படுத்தினர்.. அதற்கு நான், இந்தியாவில் கடந்த 8 வருடங்களில் பெரிய அளவுக்கு மதக்கலவர சம்பவங்கள் நடக்கவில்லை என்று ஆதாரப்பூர்வமாக சொன்னேன்.. ஒரு சில இடங்களில் மட்டும் கலவரங்கள் நடந்திருந்தாலும், இதில் தொடர்புடையவர்களுக்கு எதிராக மதம், ஜாதி போன்ற பாகுபாடின்றி, மோடி தலைமையிலான அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றேன்.

மதசாயம்

மதசாயம்

பிரதமர் மோடிக்கும், இந்த தேசத்துக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்துவதற்காக, எத்தனையோ குற்ற சம்பவங்களில் மதச்சாயம் பூசப்படுகிறது... ஆனால், 2014ல் இருந்து, குறிப்பாக பாஜக ஆட்சிக்கு வந்தததில் இருந்து ஒரு மதக் கலவரம் கூட இந்தியாவில் நடக்கவில்லை என்பதே உண்மை.. அரசியல் சாசனத்தில் மதச் சுதந்திரத்துக்கு உத்தரவாதம் உள்ளது என்றெல்லாம் அந்த குழுவினரிடம் விளக்கினேன்.. அதுமட்டுமல்ல, வலுக்கட்டாயமாகவும், மோசடி செய்தும் மதம் மாற்றுவதை மட்டுமே மோடி அரசு எதிர்ப்பதாக அவர்களிடம் கூறினேன் என்றார்

English summary
not a single major communal riot has taken place in India since 2014, says Mr. Naqvi மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி பேட்டி தந்துள்ளார்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X