குட் நியூஸ்.. ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தியர்கள் எளிதாக சென்று வர ஷெங்கன் விசா அறிமுகம்.. ரூல்ஸ் என்ன?
டெல்லி: ஷெங்கன் என்று அழைக்கப்படும் 29 ஐரோப்பிய நாடுகளுக்கு எளிதாகச் செல்ல வழிவகை செய்யும் மல்டிபிள் என்ட்ரி ஷெங்கன் விசாவிற்கு இப்போது இந்தியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு காரணங்களுக்காக இந்தியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வேலை, கல்வி, சுற்றுலா என இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு செல்வது தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

ஒரே விசா: குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை பல ஆண்டுகளாகவே தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதற்கிடையே ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்ல ஏதுவாக நீண்ட காலம் செல்லுபடியாகும் மல்டிபிள் என்ட்ரி ஷெங்கன் விசாவிற்கு இப்போது இந்தியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
அதாவது இந்தியர்களுக்கு விசா வழங்க காஸ்கேட் என்ற புதிய விதிமுறைகள் பின்பற்றப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் குறுகிய காலம் தங்க விசா வேண்டி விண்ணப்பிப்போருக்கு இந்த காஸ்கேட் ரூல்ஸ் கீழ் விசா விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
துபாய் போக போறீங்களா.. 5 ஆண்டுகள் செல்லுபடியாகும் ஸ்பெஷல் விசா.. விண்ணப்பிப்பது எப்படி! ரூல்ஸ் என்ன
நீண்ட கால விசா பெறலாம்: இந்த புதிய விதிமுறைகளின் கீழ் ஏற்கனவே ஐரோப்பிய நாடுகளுக்கு வந்து சென்ற இந்தியர்களுக்குப் பல ஆண்டுகள் செல்லுபடியாகும் நீண்ட கால விசா வழங்கப்படும். பாஸ்போர்ட் வேலிடிட்டி எந்தளவுக்கு இருக்கிறதோ.. அதைப் பொறுத்து நீண்ட காலம் செல்லுபடியாகும் விசா வழங்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி முதல் ஐரோப்பிய ஒன்றியம் இந்த புதிய விதிமுறைகளைப் பின்பற்ற ஆரம்பித்துள்ளது. பாஸ்போர்ட் வேலிடிட்டியை பொறுத்து சில ஆண்டுகள் வரை செல்லுபடியாகும்படி விசாக்கள் வழங்கப்படும். இந்தியர்கள் இந்த ஒரு விசாவை வாங்கினால் போதும் பல முறை ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று வராலாம்.. இந்த புதிய முறை இதற்கு முன்பு பின்பற்றப்பட்ட விசா நடைமுறைகளைக் காட்டிலும் இந்தியர்களுக்குப் பல சலுகைகளை வழங்குவதாக இருக்கிறது.
ரூல்ஸ் என்ன: இந்த புதிய ரூல்ஸ் படி முந்தைய 3 ஆண்டுகளில் இரண்டு முறை ஷெங்கன் விசா பெற்ற இந்தியர்கள், அடுத்த கட்டமாக இந்த புதிய மல்டி-என்ட்ரி ஷெங்கன் விசாக்களை பெற முடியும். இந்த புதிய விசாக்கள் இரண்டு ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும். பாஸ்போர்ட்டில் போதியளவு வேலிடிட்டி இருந்தால் இந்த 2 வருட விசாக்கு பிறகு இந்தியர்கள் எளிதாக 5 ஆண்டுகளுக்கான விசாவை பெற முடியும்.
இந்த விசாக்களுக்கு வேலிடிட்டி இருக்கும் வரை இந்தியர்கள் எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல் ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லலாம்... இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான உறவுகளை வலுப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவுக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் தருகிறது என்பதையே இது காட்டுகிறது.
ஷெங்கன் விசா வைத்திருப்பவர் 29 ஐரோப்பிய நாடுகளுக்கு எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல் பயணிக்கலாம். அதிகபட்சமாக 90 நாட்கள் வரை தங்கலாம். அதேநேரம் இந்த விசாவில் அங்குச் செல்வோருக்கு வேலை செய்ய உரிமை இல்லை என்பதும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஷெங்கன் பகுதி என்பது 25 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உட்பட மொத்தம் 29 ஐரோப்பிய நாடுகளைக் கொண்டதாகும்.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications