Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துபாய் போக போறீங்களா.. 5 ஆண்டுகள் செல்லுபடியாகும் ஸ்பெஷல் விசா.. விண்ணப்பிப்பது எப்படி! ரூல்ஸ் என்ன

Subscribe to Oneindia Tamil

துபாய்: ஐக்கிய அமீரகத்திற்குச் செல்லும் இந்தியர்கள் பலன் பெறும் வகையில் ஐந்து ஆண்டுகள் செல்லுபடியாகும் அட்டகாசமான ஒரு விசா திட்டம் துபாயில் உள்ள நிலையில், அதை எப்படிப் பெற வேண்டும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. கிட்டதட்ட கொரோனாவுக்கு முந்தைய காலத்திற்கு இணையாக வெளிநாடு செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.

How to apply five year multiple entry visa for indians in dubai

அதிலும் குறிப்பாக வளைகுடாவில் அமைந்துள்ள ஐக்கிய அமீரகத்திற்குச் செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல்வேறு காரணங்களுக்காக இந்தியர்கள் தொடர்ந்து ஐக்கிய அமீரகம் சென்று வருகின்றனர்.

இதற்கிடையே, இந்தியாவிற்கும் துபாய்க்கும் இடையேயான பயணங்களை அதிகரிக்கும் வகையில் துபாய் புதிய விசா முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும் இந்த விசாவை துபாய் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

துபாய் செல்லும் இந்தியர்கள்: கடந்தாண்டு மட்டும் இந்தியாவில் இருந்து 24.6 லட்சம் பேர் துபாய்க்கு சென்றுள்ளனர். இது கொரோனாவுக்கு முந்தைய காலகட்டத்துடன் ஒப்பிடும் போது சுமார் 25 சதவீதம் அதிகமாகும். உலகின் மற்ற நாடுகள் உடன் ஒப்பிடும் போது இந்தியாவில் இருந்து தான் அதிகப்படியான பயணிகள் துபாய் சென்றுள்ளனர்.

கொரோனாவுக்கு முன்பு கடந்த 2019இல் சுமார் 19 லட்சம் இந்தியர்கள் துபாய் நாட்டிற்குச் சென்ற நிலையில், கொரோனா காலத்தில் அது வெகுவாக குறைந்தது. கடந்த 2022இல் அது 18 லட்சமாக இருந்த நிலையில், கடந்தாண்டு இது 24 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் இருந்து துபாய் செல்லும் பயணிகள் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் 34 சதவீத அதிகரிக்கும் நிலையில், அங்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள் எண்ணிக்கையில் இந்தியர்கள் தான் டாப்பில் உள்ளனர்.

5 ஆண்டு விசா: இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் வகையிலேயே துபாய் ஐந்து ஆண்டுகள் செல்லுபடியாகும் விசா முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஐந்து ஆண்டு விசா இருந்தால் ஒருவரால் பல முறை துபாய்க்கு வந்து செல்ல முடியும். ஒவ்வொரு முறையும் விசா கோரி விண்ணப்பிக்க தேவையில்லை, கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த முறை அமலில் இருக்கிறது.

இந்த விசா கோரி விண்ணப்பித்தால் அது 2-5 நாட்களுக்குள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசாவை வைத்து ஒருவர் அதிகபட்சம் ஓராண்டில் 180 நாட்கள் துபாயில் இருக்கலாம். இந்த விசாவை வைத்திருந்தால் சுற்றுலாப் பயணிகள் எத்தனை முறை வேண்டும் என்றாலும் துபாய் நாட்டிற்கு வந்து செல்லலாம். இதன் மூலம் பிஸ்னஸ் டிரிப், சுற்றுலா எனப் பல வகை காரணங்களுக்கா துபாய் செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சி இந்தியர்கள் எளிதாகத் துபாய்க்குச் சென்று வருவதை உறுதி செய்யும் என்றும் இதன் மூலம் துபாய் வரும் இந்தியர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் அந்நாட்டு அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

1 முதலில் GDRFA தளத்திற்கு சென்று அதில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

2 பிறகு அதில் multiple-entry tourist visa service என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.. அதில் 'New application' என்ற இடத்திற்குச் சென்று 'New five-year tourism entry permit' என்பதைத் தேர்வு செய்து அப்ளை பட்டனை க்ளிக் செய்யவும்.

3 அதில் உங்கள் தனிப்பட்ட தகவல்கள், மதம், தாய் மொழி உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் கேட்கப்பட்டிருக்கும். அதை எல்லாம் நிரப்பவும். பிறதேவையான ஆவணங்களை இணையத்திலேயே சமர்ப்பித்து. அதற்கான கட்டணத்தையும் செலுத்தவும். நீங்கள் 30 நாட்கள் முதல் 180 வரை எந்த ஆப்ஷனை தேர்வு செய்கிறீர்களோ அதற்கேற்ப கட்டணம் இருக்கும்

4 அவ்வளவு தான் நீங்கள் செய்ய வேண்டிய வேலை முடிந்தது. உங்கள் விண்ணப்பம் பரிசீலனை செய்யப்பட்டு உங்களுக்கான விசா வழங்கப்படும்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+