CBSE புத்தகம்: டார்வின் தியரியை தொடர்ந்து ஜனநாயகம், அரசியல் கட்சிகள், தனிம அட்டவணை பாடம் நீக்கம்!
டெல்லி: சிபிஎஸ்இ (CBSE) 10-ம் வகுப்பு பாடப் புத்தகங்களில் இருந்து ஜனநாயகம், அரசியல் கட்சிகள் மற்றும் தனிம அட்டவணை ஆகிய பாடங்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்துள்ளது.
தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சிலான NCERT கடந்த சில ஆண்டுகளாக CBSE பாடப் புத்தகங்களில் முக்கியமான பாடங்களை திடீர் திடீரென நீக்கி வருகிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவிக்கின்றனர். என்சிஇஆர்டியின் இந்த நடவடிக்கை நாடு முழுவதும் எதிர்ப்பை உருவாக்கி இருக்கிறது.

அண்மையில் 9,10-ம் வகுப்பு சிபிஎஸ்இ புத்தகங்களில் இருந்து பரிணாம வளர்ச்சி தொடர்பான டார்வின் கோட்பாடு பாடம் நீக்கப்பட்டது. டார்வின் கோட்பாடுதான் பகுத்தறிவு மற்றும் அறிவியலின் அடிப்படை. மூட நம்பிக்கையை தகர்க்கக் கூடிய சிந்தனையைத் த்ரக் கூடியது. ஆனால் என்சிஇஆர்டியோ, அறிவியலின் அடிப்படையான பகுத்தறிவு சிந்தனையை வளர்க்கக் கூடிய டார்வின் தியரி பாடத்தையே நீக்கியது.
இதனைத் தொடர்ந்து தற்போது 10-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் ஜனநாயகம், அரசியல் கட்சிகள் மற்றும் ஜனநாயகம் எதிர்கொள்ளும் சவால்கள் ஆகிய அரசியல் அறிவின் அடிப்படை பாடங்களையும் நீக்கி இருக்கிறது. மேலும் தனிமங்களின் அட்டவணை எனப்படுகிற Periodic Table -ம் புத்தகங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக NCERT விளக்கம் அளிக்கையில், கொரோனா கால பாதிப்புகளை கவனத்தில் கொண்டு மாணவர்களின் பாடச்சுமையை குறைக்கும் வகையில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்லதாக கூறுகிறது. ஆனால் நாடு முழுவதும் கல்வியாளர்களும் மாணவர்களும் அரசியல், அறிவியல் ஆகிய பாடங்களின் அடிப்படை பாடங்களை மத்தியில் ஆளும் பாஜக அரசு மறுப்பது ஏன் என கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications