அக்னிபாத்தை நிச்சயம் திரும்ப பெற மாட்டோம்! மோடி பெரிய ரிஸ்க் எடுத்துள்ளார்.. அஜித் தோவல் திட்டவட்டம்
டெல்லி: அக்னிபாத் திட்டம் குறித்து தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கடந்த வாரம் அக்னிபாத் என்ற புதிய திட்டத்தைக் கொண்டு வந்தது. இத்திட்டத்தின் கீழ் ராணுவத்தில் இணையும் வீரர்கள் 4 ஆண்டுகள் பணியில் இருப்பார்கள்.
அதன் பின்னர் அவர்களில் 75% பேர் ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். 25 பேர் மட்டுமே ராணுவத்தில் தொடர முடியும்.

அக்னிபாத்
இந்தத் திட்டம் அறிவித்தது முதலே வடமாநிலங்களில் பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. முதலில் பீகார் மாநிலத்தில் தொடங்கிய போராட்டம் பின்னர், பல மாநிலங்களிலும் முழுக்க பரவி உள்ளது. பல இடங்களில் ரயில்கள் உள்ளிட்ட பொதுச்சொத்துகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அஜித் தோவல்
அக்னிபாத் குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்குப் பேட்டி அளித்த அவர், "எதிர்காலத்தில் கண்ணுக்குத் தெரியாத எதிரிகளுக்கு எதிராகத் தொடர்பே இல்லாமல் நடைபெறும் போர்கள் நடக்கும் சூழலை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். அதற்கு நமது நாட்டிற்கு இளமையான மற்றும் சுறுசுறுப்பான ராணுவம் தேவை! போர் என்ற சொல்லே பெரிய மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. தொடர்பு இல்லாத போர்களை நோக்கிச் செல்கிறோம்.

திரும்ப பெற முடியாது
கண்ணுக்குத் தெரியாத எதிரிக்கு எதிரான போரை நோக்கிச் செல்கிறோம். தொழில்நுட்பம் மின்னல் வேகத்தில் வளர்ந்து வருகிறது. வரும் காலத்திற்காக நாம் தயாராக இருக்க வேண்டும் என்றால், நாம் மாற வேண்டும். பாதுகாப்பு என்பது மாறிக் கொண்டே இருக்கும். அது நிலையானதாக இருக்க முடியாது. தேசிய நலன் மற்றும் தேசிய சொத்துக்களைப் பாதுகாக்க வேண்டியது நமது முக்கிய நோக்கம்! எனவே அக்னிபாத் திட்டத்தைத் திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை

பெரிய ரிஸ்க்
அக்னிபாத் திட்டத்தை ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது. அக்னிபாத் ஒரு தனியான திட்டம் அல்ல. 2014இல் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்ததும், இந்தியாவை எவ்வாறு பாதுகாப்பாகவும் வலுவாகவும் மாற்றுவது என்பதே அவரது முன்னுரிமைகளில் ஒன்றாகும். அதற்குப் பல வழிகள், பல படிகள் தேவை. இப்படி நாட்டை பாதுகாக்கும் திட்டங்களில் ஒன்று தான் இந்த அக்னிபாத் திட்டம்! பிரதமர் நரேந்திர மோடி போன்ற ஒரு தலைவரால் மட்டுமே, தேச நலனுக்காக அரசியல் இழப்புகளைச் சந்திக்கத் தயார் என்று கூற முடியும்.

ராணுவ உள்கட்டமைப்பு
ராணுவ உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதற்கும் மேம்படுத்துவதற்கும் அரசு முன்னுரிமை வழங்கி வருகிறது. அவை நான்கு விஷயங்களில் வருகின்றன. முதலில் நவீன ராணுவ உபகரணங்கள் தேவை, அடுத்து அமைப்புகள் மற்றும் கட்டமைப்புகளில் தேவைப்படும் மாற்றம். அதேபோல தொழில்நுட்பத்திலும் மனிதவளம் மற்றும் கொள்கைகளிலும் மாற்றம் தேவைப்படுகிறது. இவை அனைத்தும் எதிர்காலத்திற்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.

அக்னிவீரர்கள்
அக்னிவீரர்கள் ஒருபோதும் முழு ராணுவ வீரர்கள் ஆக்க மாட்டார்கள். அக்னி வீரர்கள் தீவிர பயிற்சி பெற்று அனுபவத்தைப் பெறுவார்கள். அதேநேரம் குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் வழக்கமான வாழ்க்கைக்குத் திரும்புவார்கள். அக்னி வீரர்களின் எதிர்காலம் மிகவும் பாதுகாப்பாக உள்ளது. அது குறித்துக் கவலைப்பட வேண்டாம். அதேபோல வழக்கமான படைப்பிரிவுகள் என்ற கருத்தை யாரும் மாற்றப்போவது இல்லை. அந்த முறையும் தொடர்ந்து நீடிக்கவே செய்யும்.

சதி
எந்தவொரு திட்டத்திற்கும் எதிர்ப்பு தெரிவிப்பது நியாயமானது. அதற்கு ஜனநாயகத்தில் இடம் உள்ளது. ஆனால் இந்த காழ்ப்புணர்ச்சி, வன்முறை அனுமதிக்கப்படாது, என்றும் பொறுத்துக் கொள்ளப்படாது. அக்னிபாத் போராட்டத்தின் பின்னணியில் சில அந்நிய சக்திகளின் தொடர்பு உள்ளது. சமுதாயத்தில் மோதல் ஏற்பட வேண்டும் எனச் சிலர் அக்னிபத்தை எதிர்க்கின்றனர். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அடையாளம் காணப்படுவார்கள்.
Recommended Video

நம்பிக்கை வையுங்கள்
உரிய விசாரணைக்குப் பிறகே இதன் பின்னணியில் இருந்த சக்திகள் யார் என்பதை நாம் கண்டறியலாம். அக்னி வீரர்கள் ஆக விரும்பும் இளைஞர்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது ஒன்று தான்! நேர்மறையாக இருங்கள், தேசத்தின் மீது நம்பிக்கை வையுங்கள், தலைமையின் மீதும் உங்கள் மீதும் நம்பிக்கை வையுங்கள்" என்றார்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications