பிரதமர் மோடி...தேசிய பாதுகாப்பு ஆலோசகர்...அஜித் தோவல் சந்திப்பு பின்னணி!!
டெல்லி: இந்திய சீன எல்லையில் கடந்த மே மாதத்தில் இருந்து பதற்றம் நிலவி வருகிறது என்றாலும், கடந்த ஒரு மாதமாக உச்சத்தை எட்டியுள்ளது. இருதரப்பிலும் போர் விமானங்கள் வட்டமடிப்பது, ஆயுதங்களை குவிப்பது என்று பதற்றம் நிலவி வருகிறது. பேச்சுவார்த்தைக்குப் பின்னரும் எல்லையில் இருதரப்பிலும் எந்த மாற்றங்களும் நிகழவில்லை.
முன்னதாக, இருதரப்புக்கும் இடையே ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் பேச்சுவார்த்தை நடந்தது. மாஸ்கோவில் நடந்த ஷாங்காய் உச்சி மாநாட்டில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் வெய் ஃபெங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்.

இதையடுத்து மாஸ்கோ பயணம் மேற்கொண்டு இருந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யூ உடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு இருந்தார். இந்த சந்திப்பில்தான் இருதரப்புக்கும் இடையே ஐந்து அம்சங்கள் கொண்ட ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியா, சீனா, ரஷ்ய முத்தரப்பு ஒப்பந்தமாக வெளியானது.
இதில், எல்லையில் தற்போது நடந்து வரும் பதற்றத்தில் இருதரப்புக்கும் சம்மதம் இல்லை. எல்லையில் இருதரப்பு படைகளும் பதற்றத்தை தணிக்க தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது, உடனடியாக எல்லையில் இருநாட்டுப் படைகளும் வாபஸ் பெறுவது, இருதரப்புக்கும் இடையே குறிப்பிட்ட இடைவெளியை பின்பற்றுவது, பதட்டத்தை உடனடியாக தணிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
ஆனால், இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னரும் இருதரப்பிலும் பதற்றம் தணியவில்லை என்றே கூறப்படுகிறது. இருதரப்பு படைகளும் நேருக்கு நேர் இன்னும் சவாலாக நின்று கொண்டு இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இருதரப்புக்கும் இடையே எந்த நெருடலும் இல்லாத நிலையில்தான் படைகள் வாபஸ் பெறப்படும் என்று இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்தே, படைகள் குறைப்பு என்ற அடுத்த கட்டத்துக்கு செல்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் இதுகுறித்து பிரதமர் மோடிக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் விளக்கம் அளித்து இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications