அழகாக இருக்கீங்க- முடியை பிளாட் செய்யுங்க.. சித்ரா ராமகிருஷ்ணனுக்கு தமிழ் சாமியார் அனுப்பிய கடுதாசி!
டெல்லி: நிதி மோசடி உள்ளிட்ட ஏராளமான புகார்களில் சிக்கி தலைமறைவாக இருக்கும் தேசிய பங்குச் சந்தையின் மாஜி சி.இ.ஓ சித்ரா ராமகிருஷ்ணனுக்கும் வெளி உலகம் அறியாத மர்ம இமயமலை சாமியாருக்குமான மின்னஞ்சல் தொடர்புகள் குறித்து ஊடகங்கள் ஏராளமான சந்தேக கேள்விகளை எழுப்பி வருகின்றன. இமயமலை சாமியார் தொடர்பாக செபியிடம் சித்ரா ராமகிருஷ்ணன் தெரிவித்தவற்றும் மின்னஞ்சல்கள் மூலம் சாமியார் அனுப்பியுள்ளவற்றில் உள்ள தகவல்களுக்கும் முரண்பாடுகள்தான் அதிகம் எனவும் ஊடகங்கள் சுட்டி காட்டுகின்றன.
சித்ரா ராமகிருஷ்ணன் மீது செபி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை ஏவியது. அபராதம், செயல்பாடுகளுக்கு தடை என அமல்படுத்தியது. நாட்டின் தேசிய பங்கு சந்தையின் ஒவ்வொரு நிகழ்வையும் அலுவலக நிகழ்வு, பங்கு சந்தை நிலவரம், அலுவலக பணி மாற்றங்கள் என அத்தனையையும் முகம் தெரியாத ஒரு சாமியாருடன் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார் சித்ரா ராமகிருஷ்ணன்.

மர்ம மின்னஞ்சல்கள்
இது தொடர்பாக செபி அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, அவரை 20 ஆண்டுக்கு முன்னர்தான் பார்த்தேன்.. அதன்பிறகு ஒருசில இடங்களில் சந்தித்தேன். எனக்கு மானசீகமான வழிகாட்டி. அவர் ஒரு தவயோகி என்றெல்லாம் கூறியிருக்கிறார் சித்ரா ராமகிருஷ்ணன். ஆனால் சித்ரா சொன்னது அத்தனையும் அடேங்கப்பா கப்சா என்பதை சோ கால்ட் சாமியார் அனுப்பிய மின்னஞ்சல்களை சுட்டிக்காட்டி ஊடகங்கள் எழுதியுள்ளன.

கடல் குளியல்
உதாரணமாக 2015-ம் ஆண்டு பிப்ரவரி 17-ல் சாமியாரிடம் இருந்து சித்ரா ராமகிருஷ்ணனுக்கு ஒரு இ மெயில் வருகிறது. அதில், பேக்கை எல்லாம் ரெடியாக வெச்சிருங்க.. அடுத்த மாதம் சீஷெல்ஸுக்கு போக ப்ளான் செய்திருக்கிறேன். என்னுடன் வர முடியுமானால் முயற்சி செய்யலாம். உங்களுக்கு தேவையானதை சேசு செய்வார். அப்புறம் நீச்சல் தெரிந்தால், அங்கே கடலில் குளித்துவிட்டு கடற்கரையில் ரெஸ்ட் எடுக்கலாம் என்றெல்லாம் நீள்கிறது.

அழகாக இருக்கீங்க..
இன்னொரு மின்னஞ்சல் சித்ரா ராமகிருஷ்ணன் அழகைப் பற்றியது. 2015-ம் ஆண்டு பிப்ரவரி 18-ல் அந்த மெயில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் இன்னைக்கு நீங்கள் ரொம்ப அழகாக இருக்கீங்க.. உங்கள் தோற்றத்தை இன்னும் கவர்ச்சியாகவும் மாத்தனும்னா உங்கள் தலைமுடியை பிளாட் செய்யலாம். அதுக்கு நீங்கள் நிறைய கற்றுக் கொள்ளனும். மார்ச் மாதத்தின் நடுவில் கொஞ்சம் ப்ரீயாக இருங்க எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக சாமியாரா?
2015 செப்டம்பர் 16-ந் தேதி மெயிலில், மகர குண்டல பாடலை கேட்டீங்களா? உங்கள் முகம் மற்றும் இதயத்திலிருந்து வரும் மகிழ்ச்சியை பார்த்து சந்தோஷப்படுகிறேன் என் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகர குண்டலம் என்பது திருப்புகழில் உள்ளது. இது காம உணர்வுகளை பக்தியுடன் இணைக்கக் கூடிய பாடல். மகர குண்டல பாடல் பற்றி சாமியார் தெரிந்திருக்க முடியும் எனில் அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராகவே இருக்க வாய்ப்புள்ளது என்பதையும் இந்த மெயில் வெளிப்படுத்துகிறது. மேலும் உங்களுடன் நேற்றைய நேரத்தை செலவிட்டேன். நீங்கள் செய்த இந்த சின்ன விஷயங்கள் உங்களை ரொம்பவே இளமையாக, சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கும் எனவும் விலாவரியாக அந்தரங்கம் குறித்து பேசுவதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications