சீமான் விடாப்பிடி.. ‘கரும்பு விவசாயி’ சின்னம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு!
டெல்லி: வரும் லோக்சபா தேர்தலில் கரும்பு விவசாயி சின்னத்தை எப்படியாவது பெற்றே தீருவது என்ற உறுதியுடன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது நாம் தமிழர் கட்சி.
சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, 2016 சட்டமன்றத் தேர்தல் மூலம், தேர்தல் அரசியலில் களமிறங்கியது. அந்த தேர்தலில் மெழுகுவர்த்தி சின்னத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதன்பிறகு வந்த 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டது.

இந்த லோக்சபா தேர்தலிலும் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட திட்டமிட்டு வந்தது நாம் தமிழர் கட்சி. இந்நிலையில், லோக்சபா தேர்தலில் கர்நாடகவை சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம். இதையடுத்து நாம் தமிழர் கட்சி, தேர்தல் ஆணையத்தில் முறையிட்டது. எனினும் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் வழங்க மறுத்துவிட்டது தேர்தல் ஆணையம்.
இதனைத் தொடர்ந்து மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கீடு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என சீமான் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார். அப்போது, முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் பாரதீய பிரஜா ஐக்கியதா கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. இதனையடுத்து, எந்த உத்தரவும் பிறப்பிக்காமல் டெல்லி உயர் நீதிமன்றம், சீமான் மனுவை தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில் கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சீமான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை இன்று தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, கரும்பு விவசாயி சின்னம் தங்களுக்கு ஒதுக்கப்படாதது பற்றி காட்டமாக பேசிய சீமான், "உள்ளாட்சித் தேர்தல் தொடங்கி, இடைத்தேர்தல், சட்டமன்றம் மற்றும் மக்களவைத் தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டிருக்கிறது. 7 விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருக்கிறோம். தேர்தல் ஆணையம் நிர்ணயித்திருந்த கால அளவுக்குள்தான் நாங்களும் மனு அளித்தோம். நாம் தமிழர் கட்சிக்கு இந்த சின்னம் இருக்கக் கூடாது என்று திட்டமிட்டு சதி செய்துள்ளனர்" எனத் தெரிவித்திருந்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications