நிலவில் அமைகிறது அணுமின் நிலையம்.. ரஷ்யாவுடன் கைகோர்க்கும் இந்தியா! உலகமே வியந்து பார்க்கும் திட்டம்
டெல்லி: கடந்த நூற்றாண்டில் நிலவு குறித்த ஆய்வுகள் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றன. இந்த நூற்றாண்டில் முதலில் நிலவு குறித்த ஆய்வுகள் பெரிதாக இல்லாத நிலையில், சந்திரயான் திட்டத்திற்கு பிறகு உலக நாடுகள் மீண்டும் நிலவு குறித்த ஆய்வுகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளன. இதற்கிடையே நிலவில் அணுமின் நிலையத்தை அமைக்கும் திட்டத்தை இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிலவு குறித்த ஆய்வுகள் இப்போது மீண்டும் தீவிரமாக நடந்து வரும் நிலையில், உலகின் பல நாடுகளும் நிலவில் நிரந்தரமாக தங்கள் ஆய்வு கூடத்தை அமைக்க முயன்று வருகின்றன.

நிலவில் அணுமின் நிலையம்: இந்தச் சூழலில் தான் ரஷ்யாவின் அணுசக்தி நிறுவனமான ரோசாட்டம் நிலவில் அணுமின் நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. நிலவில் சீனாவுடன் இணைந்து நிரந்தர ஆய்வு கூடம் ஒன்றை அமைக்க ரஷ்யா திட்டமிட்டு வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாகவே இந்த அணுமின் நிலையம் அமைகிறது. அந்த ஆய்வு கூடத்திற்கு தேவையான மின்சாரத்தை இதன் மூலம் பூர்த்தி செய்ய முடியும் என்று ரஷ்யா நம்புகிறது.
முதற்கட்டமாக 0.5 மெகாவாட் மின்சாரத்தை உருவாக்கும் திறன் கொண்ட ஒரு சிறிய அணு உலையை நிறுவ ரஷ்யா திட்டமிட்டுள்ளது. வரும் காலத்தில் நிலவில் தங்கி நடத்தப்படும் ஆய்வுகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த அணுமின் நிலையம் முக்கியமானதாக இருக்கும்.
திட்டம் என்ன: இது தொடர்பாக ரஷ்யா செய்தித்தொடர்பாளர் அலெக்ஸி லிகாச்சேவ் கூறுகையில், "இப்போது நாங்கள் நிலவில் அணுமின் நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளோம். முதற்கட்டமாக 0.5 மெகாவாட் வரை மின்சாரத்தை இதன் மூலம் உருவாக்க முடியும். நிலவில் பல சர்வதேச திட்டங்களை அமைக்க நாங்கள் அடித்தளமிட்டு வருகிறோம். நிலவு குறித்த எங்களின் ஆய்வுகளில் இணைந்து பணியாற்ற இந்தியாவும் சீனாவும் ஆர்வம் காட்டியும் வருகின்றன" என்றார்.
எப்போது: நிலவில் ரஷ்யாவும் சீனாவும் கூட்டாக இந்த ஆய்வகத்தை உருவாக்குகிறது. சர்வதேச சந்திர ஆராய்ச்சி நிலையம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆய்வகம் 2035 முதல் 2045 வரை செயல்பாட்டில் இருக்கும் என தெரிகிறது. தற்போது ரஷ்யா மற்றும் சீனா மட்டுமே இத்திட்டத்தில் இணைந்து இருந்தாலும் மற்ற நாடுகளும் தங்களுடன் இத்திட்டத்தில் இணையலாம் என அறிவித்துள்ளன.
பூமியில் அணுசக்தி ஆய்வகத்தை அமைப்பதே சவாலான விஷயமாக பார்க்கப்படும் நிலையில், அதை நிலவில் அமைக்கும் முயற்சியில் இந்தியாவும் கை கோர்த்து உள்ளது. அதிநவீன தொழில்நுட்பங்களுடன் மனித ஈடுபாடு மிக குறைவாக இருக்கும் வகையில் இந்த அணுசக்தி நிலையம் வடிவமைக்கப்படுகிறது. இதற்கான ஆரம்பகட்ட பணிகளை ரஷ்யா ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில், 2036ஆம் ஆண்டுக்குள் இந்த அணு உலையை செயல்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
சோலர் மின்சாரத்தை ஏன் பயன்படுத்த முடியாது: இவ்வளவு கஷ்டப்பட்டு அணுமின் நிலையத்தை அமைக்கிறார்கள். சூரிய ஒளிதான் கட்டுப்பாடு இல்லாமல் இருக்கிறதே.. அதை பயன்படுத்தலாமே என்ற கேள்வி உங்களுக்கு வரலாம்.. நிலவில் நமது பூமியை போல தினசரி சூரிய ஒளி கிடைக்காது. அங்கு 14 சந்திர நாட்கள் முழுமையாக இரவாக இருக்கும். சூரிய ஒளியே கிடைக்காது. எனவே, சோலார் மின்சாரம் எப்போதும் கிடைக்கும் என சொல்லிவிட முடியாது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
73 ஏவுகணை தாக்குதல்.. 656 ட்ரோன்.. சைரன் சத்தம்.. பெண்கள், குழந்தை கதறல்.. உக்ரைனை துவம்சம் செய்த ரஷ்யா! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications