கொரோனா வைரஸ்.. இந்தியாவில் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு.. நாடு முழுக்க 606 பேர் பாதிப்பு!
டெல்லி: இந்தியாவில் கொரோனா காரணமாக மேலும் ஒருவர் பலியாகி உள்ளார். இதனால் இந்தியாவில் கொரோனாவால் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
Recommended Video
கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 606 ஆக அதிகரித்துள்ளது. மிக அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 127 பேரும் கேரளாவில் 118 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலக நாடுகளில் மனித குலத்துக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து நிற்கிறது கொரோனா வைரஸ். இதுவரை உலகம் முழுவதும் 18,000க்கும் அதிகமான உயிர்களை பலி கொண்டிருக்கிறது கொரோனா தொற்று நோய்.

பலி 12- பாதிப்பு 606
இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு 12 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 606 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலங்களில் கேரளாவில்தான் மிக அதிகபட்சமாக 118 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்ததாக மகாராஷ்டிராவில் 127 பேர் இத்தொற்று நோயால் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

கர்நாடகாவில் 41 பேருக்கு பாதிப்பு
கர்நாடகா உள்ளிட்ட 7 மாநிலங்களில் 30க்கும் அதிகமானோர் கொரோனவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கர்நாடகாவில் 41; தெலுங்கானாவில் 39; குஜராத்தில் 36; உத்தரப்பிரதேசத்தில் 35; ராஜஸ்தானில் 32; டெல்லி மற்றும் ஹரியானாவில் தலா 30 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு- 18 பேருக்கு பாதிப்பு
பஞ்சாப் மாநிலத்தில் 29 பேரும் தமிழகத்தில் 18 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். லடாக்கில் 13; மத்திய பிரதேசத்தில் 12; மேற்கு வங்கத்தில் 9; ஆந்திராவில் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சண்டிகரில் 7; காஷ்மீரில் 6; உத்தரகாண்ட்டில் 4; பீகாரில் 4 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.

வடகிழக்கில் ஒருவருக்கு பாதிப்பு
இமாச்சல பிரதேசத்தில் 3பேரும் ஒடிஷாவில் 2 பேரும் புதுவை, சத்தீஸ்கர், மணிப்பூரில் தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் மணிப்பூரில் மட்டும்தான் கொரோனா தொற்று நோய் ஒருவரை பாதித்துள்ளது.

குஜராத் பலி
இந்தியாவில் கொரோனா காரணமாக மேலும் ஒருவர் பலியாகி உள்ளார். இதனால் இந்தியாவில் கொரோனாவால் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.குஜராத்தை சேர்ந்த பெண்மணி அகமதாபாத் மருத்துவமனையில் பலியானார் குஜராத்தில் இரண்டாவது நபர் கொரோனா காரணமாக பலி என்பது குறிப்பிடத்தக்கது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா












Click it and Unblock the Notifications