நீதி வேண்டும்.. மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு அபிநவ் பிந்த்ரா ஆதரவு.. பாஜக எம்பிக்கு சிக்கல்
டெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது முன்வைக்கப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று டெல்லி ஜந்தர் மந்நதரில் மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற அபிநவ் பிந்த்ரா ஆதரவு தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பிரிஜ் பூஷன் சரண் சிங் மூன்றாவது முறையாக இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக பொறுப்பு வகித்து வந்திருக்கிறார். அதுபோல இவர் உத்தரப் பிரதேசத்திலிருந்து எம்பியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஒரு சிறுமி உட்பட மல்யுத்த வீரர்களாக பயிற்சி பெறும் இளம் வீராங்கனைகள் பலரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருப்பதாக சக வீராங்கனைகள் குற்றம்சாட்டியுள்ளனர். கடந்த ஜனவரி மாதமே இந்த குற்றச்சாட்டு பெரியதாக வெடித்தது.

பாதிக்கப்பட்ட வீராங்கனைகளுக்கு ஆதவாக ஒலிம்பிக் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா மற்றும் சகாஷி மாலிக் உள்ளிட்ட வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் இதில் தலையிட்டு புகார்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள மேரிகோம் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. இதன் தொடர்ச்சியாக பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து வீரர்/வீராங்கனைகள் புகாரை தெரிவித்தனர்.
அவர்கள் இந்த குற்றச்சாட்டு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தனர். இதனையடுத்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. ஆனால் குழு அமைக்கப்பட்டு 3 மாதங்கள் ஆகியும் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி மீண்டும் வீரர்கள் டெல்லியில் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். கடந்த 23ம் தேதி தொடங்கிய இந்த போராட்டம் இரவு பகலாக நடைபெற்று வருகிறது. டெல்லி காவல்துறையில் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளனர்.
ஆனால் தற்போது வரை எஃப்ஐஆர் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. எனவே வீரர்கள் உச்சநீதிமன்றத்தை நாட்டியுள்ளனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் விளக்கம் கேட்டு டெல்லி போலீசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த ஜனவரியில் நடைபெற்ற போராட்டத்தில் அரசியல் கட்சியினர் யாரும் பங்கேற்க வேண்டாம் என்று வலியுறுத்தியிருந்த வீரர்கள் இந்த போராட்டத்தில் அரசியல் கட்சியினரின் ஆதரவை நாடியுள்ளனர். இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிருந்தா காரத் வீரர்களை நேரில் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ளார்.
அதேபோல கடந்த 2008ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற அபிநவ் பிந்த்ரா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வீரர்/வீராங்கனைகளுக்கு ஆதரவளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, "விளையாட்டு வீரர்களாக சர்வதேச அரங்கில் நமது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்த நாங்கள் ஒவ்வொரு நாளும் கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு இருக்கையில், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் துன்புறுத்தலுக்கு எதிராக வீரர்கள் போராட்டத்தில் ஈடுபடும் அளவுக்கு தள்ளப்பட்டிருப்பது மிகுந்த கவலையளிக்கிறது.
வீரர்களின் பிரச்னைகள் கவனமாக கேட்கப்பட்டு அவை நியாயமாகவும், சுதந்திரமாகவும் விசாரிக்கப்பட வேண்டும். இந்த பிரச்னை தீர்க்கப்படுவதன் மூலம் நம்பிக்கையை உருவாக்க வேண்டும். அனைத்து வீரர்களும் பாதுகாப்பான சூழலில் வளர்வதை உறுதி செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications