மேலும் 2 நாடுகளில் ஓமிக்ரான் பாதிப்பு...59 நாடுகளில் 2,936 பேருக்கு தொற்று

Subscribe to Oneindia Tamil

டெல்லி : மேலும் 2 நாடுகளில் ஓமிக்ரான் பாதிப்பு உருவான நிலையில் தற்போது வரை 59 நாடுகளில் ஓமிக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

59 நாடுகளில் இதுவரை சுமார் 2,936 பேருக்கு ஓமிக்ரான் தொற்று இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

மேலும் ஓமிக்ரான் அறிகுறி உள்ள 78,054 பேருக்கு மரபணு பரிசோதனை நடைபெற்று வருவதாகவும் விரைவில் முடிவுகள் வெளியாகும் எனவும் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

25 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு

25 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு

டெல்லியில் செய்தியாளர் சந்திப்பு நிகழ்த்திய மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் இந்தியாவில் இதுவரை 25 பேருக்கு ஓமிக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஆனாலும் அவர்களுக்கு ஓமிக்ரானின் லேசான அறிகுறிகள் மட்டுமே அதாவது 0.04 சதவீதம் மட்டுமே இருப்பதாகவும் அகர்வால் தெரிவித்தார். கடந்த வாரத்தை பொறுத்தவரை இந்திய மக்கள் தொகையில் 0.73 சதவீதம் பேருக்கு கொரோனா தொற்று உள்ளதாகவும், கடந்த 14 நாட்களில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்திற்கும் குறைவாக பதிவாகி உள்ளதாகவும் தெரிவித்தார். அதே சமயம் கேரளா மற்றும் மகராஷ்டிராவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக தெரிவித்த லால் அகர்வால் இது 10 சதவீதம் கூடுதலாக பதிவாகி இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் 2 நாடுகளில் ஓமிக்ரான்

மேலும் 2 நாடுகளில் ஓமிக்ரான்

உலக நாடுகளை பொறுத்தவரை மேலும் 2 நாடுகளில் ஓமிக்ரான் பாதிப்பு உருவாகி உள்ளதாக தெரிவித்த அகர்வால், தற்போது வரை 59 நாடுகளில் சுமார் 2,936 பேருக்கு ஓமிக்ரான் தொற்று இருப்பதாகவும், ஓமிக்ரான் அறிகுறி உள்ள 78,054 பேருக்கு மரபணு பரிசோதனை நடைபெற்று வருவதாகவும் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை கண்காணிப்பது, பரிசோதனை செய்வது, அவர்கள் செல்லும் இடங்களை கண்டறிவது என சுகாதாரத்துறை சார்பில் அனைத்து கட்டமைப்புகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்த அகர்வால் மாநில அரசுகளும் வெளிநாட்டு பயணிகளை கண்காணித்து கோவிட் டெஸ்ட் எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மாஸ்க், சமூக இடைவெளி கட்டாயம்

மாஸ்க், சமூக இடைவெளி கட்டாயம்

தடுப்பூசி மட்டுமே தீர்வு கிடையாது என தெரிவித்துள்ள உலக சுகாதார மையம் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் என அனைத்தும் விதிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் அஜாக்கிரதையாக இருந்ததால்தான் அங்கே கொரோனா தொற்ற அதிகரித்துவிட்டதாக அவர் தெரிவித்தார் இதற்கிடையே தான்சானியாவில் இருந்து மும்பை தாராவி பகுதிக்கு வந்த ஒருவருக்கு ஓமிக்ரான் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது அவருக்கு மும்பை நகராட்சி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Recommended Video

    Omicron Symptoms என்ன? | உருமாறிய புதிய Corona Variant | Oneindia Tamil
    ஓமிக்ரான் வைரஸ்

    ஓமிக்ரான் வைரஸ்

    நவம்பர் 25ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் புதிய உருமாறிய ஓமிக்ரான் வைரஸ் B1.1 529 எனும் புதிய வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது. இது கொரோனாவில் இருந்து 30க்கும் அதிகமான முறை மரபியல் மாற்றமடைந்து உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஓமிக்ரான் தொற்று இதுவரை 59 நாடுகளுக்குப் பரவி உள்ளதாகவும், மற்ற நாடுகளைப் பாதிக்கும் சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+