10 ஆண்டுகளுக்கு பின் இந்தியா வரும் பாக் அமைச்சர்.. அறிவிப்பு வந்த நாளே காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாகப் பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் இந்தியா வரவுள்ளதாக அறிவிப்பு வெளியான அன்றே, பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் போக்கே பல காலமாக நிலவி வருகிறது. மும்பை தாக்குதல் இரு தரப்பிற்கும் இடையேயான உறவை மிக மோசமானதாக மாறியது.

 On Same day, Pakistan minister Conforms india visit and terror attack in kashmir

அதன் பின்னர் எல்லையில் பதற்றமான ஒரு சூழலே நிலவி வருகிறது. பாகிஸ்தான் எல்லையில் இருந்து பயங்கரவாதிகள், டிரோன்கள் நுழைய முயலும் சம்பவங்கள் நடந்து கொண்டே தான் இருக்கிறது.

இந்தியா வரும் பாக். அமைச்சர்: இதனால் கடந்த பல ஆண்டுகளாகவே பாகிஸ்தான் அமைச்சர் யாரும் இந்தியாவுக்கு வந்தது இல்லை. அதேபோல இந்திய அமைச்சர்கள் யாரும் பாகிஸ்தானுக்குச் சென்றது இல்லை. கடந்த 2014ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் நவாஸ் ஷரீப் இந்தியா வந்திருந்தார். அதன் பிறகு பாகிஸ்தான் அமைச்சர் யாரும் இந்தியாவுக்கு வந்ததே இல்லை.

இதனிடையே சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாகப் பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் முதல்முறையாக இந்தியா வரவுள்ளார். இதை அந்நாட்டு அரசே உறுதி செய்துள்ளது. கோவாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் நடக்கும் நிலையில், இதில் பங்கேற்கப் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி இந்தியா வரவுள்ளார். இதைப் பாகிஸ்தான் அரசே உறுதி செய்துள்ளது.

பயங்கரவாத தாக்குதல்: இதன் பிறகாவது இரு தரப்பிற்கும் இடையேயான உறவு மேம்படுமோ என்று எதிர்பார்த்தனர். இருப்பினும், பாகிஸ்தான் அமைச்சரின் வருகை உறுதியான நாளிலேயே, காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் அரங்கேறியுள்ளது. காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் மலைப்பகுதி இந்திய ராணுவ வாகனம் சென்று கொண்டிருந்த போது, வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் 5 வீரர்கள் கொல்லப்பட்டனர். முதலில் இது விபத்து என்றும் மின்னல் தாக்கி இது நிகழ்ந்திருக்கலாம் என்றும் சொல்லப்பட்டது.

அதன் பின்னரே, இது விபத்து இல்லை, திட்டமிட்டு நடந்த தாக்குதல் என்பது தெரிய வந்துள்ளது. அதாவது அப்பகுதியில் கனமழை பெய்து வந்து நிலையில், அதைப் பயன்படுத்தி ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் மூன்று பக்கத்திலும் சூழ்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அதன் பின்னர் கையெறி குண்டு தாக்குதல் நடந்துள்ளது. இதன் காரணமாகவே ராணுவ வாகனம் தீப்பிடித்து எரிந்துள்ளதாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

ஜெய்ஷ்-இ-முகமது: இந்த பயங்கரவாத தாக்குதலை ஜெய்ஷ்-இ-முகமது ஆதரவு பயங்கரவாதக் குழுவான மக்கள் பாசிச எதிர்ப்பு முன்னணி (PAFF) பொறுப்பேற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஜெய்ஷ்-இ-முகமது என்பது பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஒரு பயங்கரவாத அமைப்பாகும். இது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவைப் பாதிக்கலாம்.

பாக். அமைச்சர் இந்தியா வரவுள்ளது உறுதியான நாளன்றே பாக்.இன் ஜெய்ஷ்-இ-முகமது ஆதரவு பயங்கரவாதிகள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+