சூடான்: ராணுவம், துணை ராணுவம் இடையே உக்கிர மோதல்- உயிரிழப்பு 56 ஆக அதிகரிப்பு; இந்தியர் ஒருவர் பலி
கார்டோம்: சூடானில் ராணுவம்- துணை இராணுவ குழுக்களிடையேயான மோதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்த ஆல்பர்ட் அகஸ்டின் என்பவரும் கொல்லப்பட்டுள்ளதாக சூடானில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

சூடானில் 2019-ம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அதிபர் அல் பஷீர் ஆட்சி கவிழ்ப்புக்குப் பின்னரான ராணுவ ஆட்சிக்கு எதிராக பல்வேறு துணை ராணுவ குழுக்கள் ஆயுத கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த ஆயுதக் குழுக்களில் Rapid Support Forces என்பது அதிக வலிமையானதாகவும் கருதப்படுகிறது.
சூடான் ராணுவம், துணை ராணுவமான Rapid Support Forces இடையேயா மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கார்டோம் விமான நிலையத்தை கைப்பற்றியதாக துணை ராணுவக் குழு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து துணை ராணுவக் குழுவினர் மீது சூடான் ராணுவம் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. கடந்த சில நாட்களாக இந்த தாக்குதல் அதிகரித்துள்ளது.
இதனால் இந்தியர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என சூடானில் உள்ள இந்திய தூதரகம் வேண்டுகோள் விடுத்து வந்தது. இந்நிலையில் ராணுவம், துணை இராணுவம் இடையேயான மோதலில் ஆல்பர்ட் அகஸ்டின் என்ற இந்தியர் உயிரிழந்துள்ளதாக சூடானில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications