என்னது! ஒரு கிமீ சாலைக்கு ரூ.250 கோடி செலவா.! டெண்டர் தருவதிலும் பெரிய முறைகேடாம்! அலர்ட் தந்த சிஏஐி
டெல்லி: பாரத மாலா திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் நெடுஞ்சாலையில் ஒரு இடத்தில் கிலோமீட்டருக்கு சாலை அமைக்க 250 கோடி செலவாகியுள்ளதாக சிஏஜி தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
நாடு முழுக்க மத்திய அரசு பாரத மாலா திட்டத்தின் கீழ் பல்வேறு இடங்களில் எக்ஸ்பிரஸ் சாலை, நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள் என உட்கட்டமைப்பை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன்படி டெல்லி மற்றும் ஹரியானாவின் குருகிராம் பகுதிகளை இணைக்கும் துவாரகா நெடுஞ்சாலை கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதற்கிடையே இதற்கான செலவு அனுமதிக்கப்பட்ட தொகையைக் காட்டிலும் 14 மடங்கு அதிகரித்துள்ளதாக சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தற்போது டெல்லி குருகிராமை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை NH-48 எப்போதும் நெரிசல் மிகுந்த ஒன்றாகவே இருக்கும். இதைக் குறைக்கும் வகையிலேயே இங்குப் புதிதாக 8 லேன் கொண்ட துவாரகா நெடுஞ்சாலை கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஒப்புதல் தரப்பட்டு கட்டுமான பணிகள் படுவேகமாக நடந்து வருகிறது. இதில் தான் அனுமதிக்கப்பட்டதைக் காட்டிலும் அதிகமாகச் செலவாகியுள்ளதாக சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ரூ. 250 கோடி: இந்த நெடுஞ்சாலையை அமைக்க ஒரு கிமீ-க்கு ரூ.18.20 கோடி வரை செலவு செய்யலாம் என அனுமதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், கடைசியில் இங்கே ஒரு கிலோமீட்டருக்கு ரூ. 250.77 கோடியைச் செலவழித்துள்ளனர். இது குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. அதாவது அனுமதிக்கப்பட்ட செலவைக் காட்டிலும் 14 மடங்கு கூடுதலாகச் செலவாகியுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாகக் கடந்த ஏப்ரல் 2022இல் சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் கூறியுள்ள கருத்துகளையும் சிஏஐி அறிக்கை மேற்கோள் காட்டியுள்ளது. அதில், "துவாரகா விரைவுச்சா என்பது மாநிலங்களுக்கு இடையே சுமுகமான போக்குவரத்தை ஏற்படுத்த அமைக்கப்படும் சாலை. குறைந்த இடங்களில் மட்டும் உள்ளே வரவும் வெளியே செல்லவும் வழி இருக்கும் வகையில் இந்த 8 லேன் சாலை உருவாக்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது. இதுவே செலவு அதிகரிக்கக் காரணம் எனக் கூறப்பட்டுள்ளது.
காரணம் தெரியவில்லை: தினசரி 55,432 வாகனங்கள் செல்லும் இந்த ரூட்டில் உயர்த்தப்பட்ட 8 லேன் சாலையை அமைக்க எந்தவொரு காரணமும் கூறப்படவில்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது. 2,32,959 வாகனங்களைக் கொண்ட ரூட்களிலேயே கூட 6 லேன் சாலைகள் தான் அமைக்கப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
அதேநேரம் ஒப்புதல் அளிக்கப்பட்ட தொகையைக் காட்டிலும் இந்த ஒரு நெடுஞ்சாலை திட்டத்திற்கு மட்டும் அதிக செலவாகவில்லை. பல திட்டங்களுக்கு இப்படி அதிக செலவாகியுள்ளது. இந்தியா முழுவதும், பாரத்மாலா திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் திட்டங்களில் அனுமதிக்கப்பட்ட தொகையைக் காட்டிலும் 58% அதிகம் செலவாகியுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
செலவு அதிகம்: ஒரு கிமீக்கு ரூ.15 கோடியை சிஏஜி அனுமதித்த நிலையில், அதற்கு மாறாக ஒரு கிமீ ரூ. 32.17 கோடி வரை செலவாகியுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. செலவு அதிகரித்துள்ள போதிலும், கடந்த 2022இல் முடிக்க வேண்டிய 34,800 கிமீ தேசிய நெடுஞ்சாலைகள் உரியக் காலக்கெடுவுக்குள் முடிக்கப்படவில்லை. கடந்த மார்ச் 31 வரை 13,499 கிமீ தேசிய நெடுஞ்சாலைகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.
இது மொத்த பாதையில் வெறும் 38.79 சதவீதம் மட்டுமே ஆகும். கொரோனா காலத்திலும் இந்த சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. பல்வேறு காரணங்களால் ஒரு கிமீ-க்கு ₹ 10 கோடி வரை அதிகரித்துள்ளது. இந்த கூடுதல் நிதியைப் பிற திட்டங்களுக்கான நிதியில் இருந்து எடுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
டெண்டர் விதிமுறைகள்: மேலும், டெண்டர் கொடுக்கப்பட்டதிலும் சிஏஜி விதிமுறைகள் உரிய முறையில் பின்பற்றப்படவில்லை என அதில் கூறப்பட்டுள்ளது. டெண்டர் எடுத்த பிறகு அதன் நிபந்தனையைப் பூர்த்தி செய்யாமல் போனது.. போலியான ஆவணங்களின் அடிப்படையில் டெண்டர் எடுத்தது எனப் பல வழக்குகள் உள்ளன. மேலும், விரிவான திட்ட அறிக்கை கூட இல்லாமல் பல திட்டங்களுக்கு டெண்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், தேவையான நிலம் இருப்பதை உறுதி செய்யாமல் திட்டங்களை ஆரம்பித்தது.. உள்ளிட்ட பல காரணங்களால் சாலை அமைக்கும் பணிகள் தாமாகியுள்ளது. மேலும், பாரத்மாலா திட்டங்களின் கீழ் அமைக்கப்படும் பல கட்டுமானங்கள் உரியச் சுற்றுச்சூழல் அனுமதியின்றி செயல்படுத்தப்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications