“கடைசி சான்ஸ்”.. நீட் தேர்வு எழுதும் / எழுத விரும்பும் மாணவர்களே.. NTA வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
டெல்லி: நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை மேலும் 2 நாட்கள் கூடுதலாக வழங்கியுள்ளது தேசிய தேர்வு முகமை. ஏப்ரல் 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்புகளின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (NTA) நடத்தி வருகிறது.

வரும் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட13 மொழிகளில் மே 5ஆம் தேதி நேரடி முறையில் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி தொடங்கியது. முதலில் மார்ச் 9ஆம் தேதி இரவு 11.55 வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன் பிறகு நீட் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு மார்ச் 16ஆம் தேதி இரவு 10.50 மணி வரை நீட்டிக்கப்படுவதாக தேசிய தேர்வுகள் முகமை அறிவித்தது. அதன்படி, ஏராளமான மாணவ மாணவிகள் மார்ச் 16ஆம் தேதி வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். 23 லட்சத்திற்கும் அதிகமானோர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
விண்ணப்பப் பதிவு ஏற்கனவே நிறைவடைந்த நிலையில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் இருந்து விண்ணப்பப் பதிவு மேற்கொள்ள மறுவாய்ப்பு கேட்டு தேசிய தேர்வு முகமைக்கு ஏராளமான கோரிக்கைகள் வந்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் தேசிய தேர்வு முகமை இளநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை முதல் நாளை மறு நாள் வரை (ஏப்ரல் 10) வரை விண்ணப்ப பதிவு செய்யலாம் என அறிவித்துள்ளது.
இதுவரை விண்ணப்பிக்காதவர்கள், பழைய விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய நினைப்பவர்கள் இந்த கடைசி வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் neet.nta.nic.in என்ற இணையதளம் வாயிலாக ஏப்ரல் 10ம் தேதி இரவு 10.50 மணி வரை விண்ணப்பிக்கலாம், விண்ணப்ப கட்டணத்தை அன்று இரவு 11.50 வரை செலுத்தலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications