மாஜி ராணுவத்தினர் ஓய்வூதியம்- சட்டத்தை கையில் எடுக்குதா பாதுகாப்பு அமைச்சகம்?விளாசிய உச்சநீதிமன்றம்!
முன்னாள் ராணுவத்தினர் ஓய்வூதிய விவகாரத்தில் பாதுகாப்பு அமைச்சகத்தை கண்டித்தது உச்சநீதிமன்றம்.
டெல்லி: முன்னாள் ராணுவத்தினருக்கான ஓய்வூதியத்தை தராமல் இழுத்தடிக்கும் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் பாதுகாப்பு அமைச்சகம் சட்டத்தை தன் கையில் எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தலைமை நீதிபதி சந்திரசூட் கடுமையாக உத்தரவிட்டார்.
மத்திய பாஜக அரசு ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்தது. இந்த திட்டம் மூலம் முன்னாள் ராணுவ வீரர்களின் 25 லட்சம் குடும்பம் பயனடையும் என்பதும் மத்திய அரசின் அறிவிப்பு.

மத்திய அரசு, இந்த ஒரே பதவி- ஒரே ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற ராணுவத்தினருக்கு ஓய்வூதியத்தை வழங்கவில்லை என்பது பொதுநலன் வழக்கு. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு, 3 மாதங்களுக்குள் நிலுவைத் தொகையை வழங்க உத்தரவிட்டு தீர்ப்பளித்தது. ஆனாலும் மத்திய அரசு ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்கவில்லை.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மீண்டும் முறையிடப்பட்டது. இதனை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் விசாரித்து வருகிறது. இது தொடர்பான வழக்கு கடந்த ஜனவரி மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி, மார்ச் 15-ந் தேதிக்குள் 25 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் நிலுவைத் தொகை வழங்கப்பட்டுவிடும் என உறுதி அளித்தார். இதனை உச்சநீதிமன்றமும் ஏற்று, அனைத்து நிலுவைத் தொகையையும் மார்ச் 15-ந் தேதிக்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
ஆனால் கடந்த ஜனவரி 20-ந் தேதி திடீரென பாதுகாப்புத் துறை செயலாளர் ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அதில், முன்னாள் ராணுவத்தினருக்கான ஓய்வூதிய தொகை 4 தவணைகளாக வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது. இதற்கு எதிராக மீண்டும் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அப்போது, ஓய்வூதிய தொகையை வழங்க ஏற்கனவே பாதுகாப்புத் துறை அமைச்சகத்துக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவை மீறி 4 தவணைகளாக வழங்குவோம் என்ற அறிவிப்பு நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. இது தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. மேலும் மார்ச் 15-ந் தேதிக்குள் முன்னாள் ராணுவத்தினருக்க் ஓய்வூதியத் தொகையை வழங்கித்தான் ஆக வேண்டும் எனவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் உத்தரவிட்டது.

இந்நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி சந்திரசூட், பாதுகாப்புத் துறை அமைச்சகம் சட்டத்தை தன் கையில் எடுக்காது என்பதை உறுதி செய்ய வேண்டும். 4 தவணைகளாகத்தான் ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற ஜனவரி 20-ந் தேதி அறிவிக்கையை உடனே திரும்பப் பெற வேண்டும். அந்த உத்தரவு உச்சநீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிரானது என கடுமையாக கூறினார்.
அப்போது அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி, மார்ச் 21-ந் தேதிக்குள் அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் நிலுவைத் தொகை வழங்கப்பட்டுவிடும் என உறுதியளித்தார். இதற்கு மனுதாரர்கள் தரப்பில் கடும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே 4 லட்சம் ஓய்வூதியதாரர்கள் உயிரிழந்துவிட்டனர்; இன்னமும் மத்திய அரசுக்கு கால அவகாசம் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி, 28 லட்சம் ஓய்வூதியதாரர்களில் 7 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டது. பல்வேறு நிர்வாக முட்டுக்கட்டைகள் இருந்து வருகின்றன என்றார். இதனைத் தொடர்ந்து விரைவாக ஓய்வூதியம் வழங்குவதற்கான நடவடிக்கை தொடர்பான பரிந்துரையை வழங்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவிட்டார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications