டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

1/3 இந்தியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து இருக்கலாம்.. ஐ.சி.எம்.ஆர். பகீர்!

Google Oneindia Tamil News

டெல்லி: நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அனேகமாக குணமடைந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இந்தியா 6-வது இடத்தில் இருக்கிறது. ஒருநாள் கொரோனா பாதிப்பு அமெரிக்கா, பிரேசில், ரஷ்யாவை தொடர்ந்து இந்தியா 4வது இடத்தில் இருக்கிறது.

ஆபத்தான நிலையில் ஜெ.அன்பழகன்... லண்டன் மருத்துவர்களிடம் யோசனை கேட்ட ரேலா மருத்துவர்கள் ஆபத்தான நிலையில் ஜெ.அன்பழகன்... லண்டன் மருத்துவர்களிடம் யோசனை கேட்ட ரேலா மருத்துவர்கள்

மோசமான பாதிப்பு

மோசமான பாதிப்பு

இந்தியாவிலேயே மகாராஷ்டிரா , தமிழ்நாடு, டெல்லி, குஜராத் மாநிலங்களில்தான் மிக மோசமான கொரோனா பாதிப்பு உள்ளது. இனிவரும் காலங்களில் இந்த கொரோனா பாதிப்பு மிக மோசமாக இருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது.

மருத்துவ கவுன்சில்

மருத்துவ கவுன்சில்

இந்த நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு ஒன்றை நடத்தி அறிக்கை தயாரித்துள்ளது. இந்த அறிக்கையானது மத்திய கேபினட் செயலாளர் மற்றும் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் மும்பை, புனே, டெல்லி, அகமதாபாத், இந்தூரில் கொரோனா பாதிப்பு விகிதம் அதிகரித்திருக்கிறது. இந்த நகரங்களில் நோய் பாதித்த ஹாட்ஸ்பாட் பகுதிகளைவிட 100 மடங்கு பாதிப்பு இருக்கிறது எனவும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

சோதனை மாதிரிகள்

சோதனை மாதிரிகள்

மும்பை, தானே, புனே, அகமதாபாத், சூரத், டெல்லி, கொல்கத்தா இந்தூர், ஜெய்ப்பூர் மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் அதிகம் பாதிக்கப்பட்ட நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் 500 பேரின் மாதிரிகள் சோதனைக்கு எடுக்கப்பட்டன. இதேபோல் 21 மாநிலங்களில் 60 மாவட்டங்களில் 400 மாதிரிகளும் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

Recommended Video

    தமிழகத்தில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்... பின்னணி என்ன?
    நிலவரம் என்ன?

    நிலவரம் என்ன?

    இதனடிப்படையில்தான் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் 3-ல் ஒரு பங்கு இந்தியர்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டு குணமடைந்திருப்பது தெரியவந்துள்ளது. இன்னமும் 8 மாவட்டங்களின் முடிவுகள் ஆராய்ப்பட்டு இறுதி அறிக்கை அடுத்த சில வாரங்களில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

    English summary
    According to the ICMR Report that One-third of Indians may have been infected by coronavirus.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X