ஆயிரத்தில் 3 பேருக்கு தானா? வேலைவாய்ப்பு சரிவு குறித்து ராகுல் காந்தி விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வேலை வாய்ப்பு குறித்து அமைச்சர் ஜித்தேந்திர சிங் அறிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில், இதை குறிப்பிட்டு நாட்டில் ஆயிரம் பேரில் 3 பேருக்கு மட்டுமே அரசு வேலை கிடைக்கிறது என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

கால் காசு ஆனாலும் அது கவர்மெண்ட் காசாக இருக்கணும் என நம்ம ஊரில் ஒரு பழமொழி உண்டு.

அந்த அளவுக்கு அரசு வேலை மீது எல்லோருக்கும் ஒரு காதல் இருக்கத் தான் செய்யும். தங்கள் பிள்ளைகளை எப்படியாவது ஒரு அரசு பணியாளராக ஆக்கிவிட வேண்டும் என்ற கனவுகளுடன் இல்லாத பெற்றோர்களே இல்லை எனலாம்.

 அரசு பணி

அரசு பணி

அதேபோல், நாட்டில் பெரும்பாலான இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களின் லட்சியங்களில் ஒன்றாக அரசு பணி என்பது உள்ளது. அதற்காக அவர்கள் தீவிரமான முயற்சியிலும் ஈடுபட்டு தான் வருகின்றனர். ஆனால், சமீப காலமாக அரசு பணி கிடைப்பதென்பது குதிரைக்கொம்பாகவே உள்ளது. ஆண்டு தோறும் அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் இளைஞர்கள், இளம் பெண்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒருபக்கம் அரசு துறைகளில் காலி பணியிடங்களை உரிய நேரத்தில் நிரப்படுவது இல்லை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

 அவ்வளவு எளிதல்ல

அவ்வளவு எளிதல்ல

ஒரு 8-ம் வகுப்பு தகுதிக்கான வேலைக்கு கூட பட்டதாரிகள் முதல் என்ஜினீயர்கள் வரை முண்டியடித்துக்கு கொண்டு விண்ணப்பிக்கின்றனர். தற்போது நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப்-4 பணிக்கு கூட 22 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு மக்கள் இளைஞர்கள் மத்தியில் அரசு வேலை ஒரு கனவாக இருந்து வருகிறது. ஆனால் அரசு பணி கிடைப்பது என்பது அவ்வளவு எளிது அல்ல என்பது மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையே சான்றாகியுள்ளது. கடந்த 2014- ஆம் ஆண்டு முதல் 22 கோடியே 05 லட்சத்து 99 ஆயிரத்து 238 பேர் அரசுக்கு பணிக்கு விண்ணப்பித்து உள்ளனர். இவர்களில் வெறும் 7 லட்சத்து 22 ஆயிரத்து 311 பேருக்கு மட்டுமே பணி கிடைத்துள்ளது.

 ஜித்தேந்திர சிங் அறிக்கை

ஜித்தேந்திர சிங் அறிக்கை

இந்த விவரங்கள் அனைத்தும், பிரதமர் அலுவலகத்துறை இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங் தாக்கல் செய்த அறிக்கையில் தெரியவந்துள்ளது. ஜிதேந்திர சிங் வெளியிட்டுள்ள தகவலின் படி, 2014-15 ஆம் ஆண்டில் 2,32,22,083 பேர் அரசு பணிக்கு விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 1,30,423 பேருக்கு மட்டுமே பணி கிடைத்துள்ளது. 2015-16 ஆம் ஆண்டில் 2,95,51,844 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர். வேலை கிடத்தவர்கள் எண்ணிக்கை 1,11,807 ஆகும். 2016-17 ஆண்டில் 2,28,99,612 விண்ணப்பம் செய்துள்ளனர். இவர்களில் தேர்வு செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,01,333- ஆகும். 2017-18 ஆம் ஆண்டில் 3,94,76,878- பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் வேலை கிடத்தவர்கள் எண்ணிக்கை 76,147- ஆகும். 2018-19 ஆம் ஆண்டில் 5,09,36,479- பேர் வேலைக்கு விண்ணப்பித்து இருந்தனர். இதில் வேலைக்கு தேர்வானர்கள் எண்ணிக்கை 38,100- ஆகும்.

 தொடர்ந்து சரிவு

தொடர்ந்து சரிவு

2019-20 ஆம் ஆண்டில் 1,78,39,752 விண்ணப்பித்து இருந்தனர். இதில் வேலை கிடத்தவர்கள் எண்ணிக்கை 1,47,096- ஆகும். 2020-21 ஆம் ஆண்டில் 1,80,01,469 பேர் அரசுப் பணிக்கு விண்ணப்பித்து இருந்தனர். தேர்வு செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 78,555 மட்டுமே ஆகும். 2021-22 ஆம் ஆண்டில் 1,86,71,121 விண்ணப்பித்து இருந்தனர். தேர்வு செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 38,850 ஆக உள்ளது. 2019-20 ஆம் ஆண்டு மட்டுமே இதில் பணியிடங்கள் அதிக அளவில் நிரப்பட்டுள்ளன. ஏனைய ஆண்டுகளில் தொடர்ந்து சரிந்து வருவதை காண முடியும்.

 ராகுல் காந்தி டுவிட்

ராகுல் காந்தி டுவிட்

இந்த நிலையில், இது குறித்து மத்திய அரசை சாடியுள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, 'நாட்டில் வேலை வாய்ப்பின்மையை ஒழிக்க எந்த முயற்சியையும் மத்தியில் ஆளும் பாஜக அரசு எடுக்கவில்லை' என்றார். நாட்டின் சொத்துக்களை பொறுப்புகளாக ஆளும் கட்சி மாற்றிவிட்டதாகவும் விமர்சித்துள்ள ராகுல் காந்தி, கடந்த 8 ஆண்டுகளில் 22 கோடி இளைஞர்கள் அரசு வேலைக்காக வரிசை கட்டி நிற்கும் நிலையில் வெறும் 7.22 லட்சம் பேருக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளது. இது 1000-ல் வெறும் 3 தான்" என ட்விட் செய்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+