ஏமனில் மரண தண்டனை.. கேரள நர்சை காப்பாற்ற ஒரே வழிதான் இருக்கு.. ஓப்பனாக சொன்ன வழக்கறிஞர்
டெல்லி: ஏமன் நட்டில் கொலை குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரள நர்சு நிமிஷாவை, தண்டனையில் இருந்து காப்பாற்ற ஒரே வழிதான் இருப்பதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஏமன் நாட்டிற்குச் சென்ற கேரளாவைச் சேர்ந்த நர்ஸ் ஒருவருக்குக் கொலை குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தை சேர்ந்த நர்சு நிமிஷா பிரியா என்ப்பவர் வேலை தேடி ஏமன் நாட்டிற்கு சென்றார். அங்கே நர்ஸாக பணிபுரிந்து வந்தார். கடந்த 2017-ல் ஏமன் நாட்டைச் சேர்ந்த ஒருவரைக் கொன்ற வழக்கில் நிமிஷா பிரியா கைதானார். அவர் மீதான குற்றச்சாட்டு என்னவென்றால், ஏமன் நாட்டில் பிரியாவின் பாஸ்போர்ட்டை அங்குள்ள தலால் அப்தோ மஹ்தி என்பவர் பறித்து லாக்கரில் வைத்துள்ளார்.

வேலை பிடிக்காமல் பிரியா நாடு திரும்ப முயன்ற நிலையில், அப்தோ மஹ்தி பாஸ்போர்ட்டை கொடுக்காமல் மிரட்டியிருக்கிறார்.. இதனால் அப்தோ மஹ்தியிடம் இருந்து பாஸ்போர்ட் உள்ள லாக்கரின் பாஸ்வோர்ட்டை வாங்க அவருக்குப் பிரியா மயக்க ஊசி போட்டுள்ளார். அப்போது மயக்க மருந்து அதிகரித்த நிலையில், அவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். இந்த வழக்கில் தான் நிமிஷா பிரியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து சிறையிலேயே நிமிஷா பிரியா இருந்து வருகிறார். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
நீதிமன்றத்தில் வழக்கு: இதை எதிர்த்து ஏமன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.எனினும் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இந்த மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது. முன்னதாக ப்ரியாவின் தாய் தன்னை ஏமன் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று இந்தாண்டு தொடக்கத்தில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஏமன் நாட்டில் நடந்து வரும் உள்நாட்டுப் போர் காரணமாகக் கடந்த 2017 -ஆம் ஆண்டு முதல் இந்தியக் குடிமக்கள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், தனது மகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அங்கே செல்ல தன்னை அனுமதிக்குமாறு பிரியாவின் தாய் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். உயிரிழந்த அந்த தலால் அப்தோ மஹ்தி குடும்பத்திடம் சென்று சமரசம் பேசவே பிரியாவின் தாயார் முயற்சி எடுத்து வருகிறார். இதற்காகவே அவர் ஏமன் செல்ல முயற்சித்து வருகிறார்.
ஒரு வாரத்தில் முடிவு: இந்த வழக்கில் பிரியாவின் தாயார் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் சுபாஷ் சந்தரன், "பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்துடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்துவதே பிரியாவை காக்க இருக்கும் ஒரே வழி. ஆனால் இந்தியர்களுக்குப் பயண தடை இருக்கிறது. எனவே, அரசு இதில் தலையிட்டு மனிதாபிமான அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும்" என்றார்.
இது தொடர்பான வழக்கில் ஏமனுக்கு விதிக்கப்பட்டுள்ள பயணத் தடை தளர்த்தப்படலாம் என்றும், அவசர தேவைகளுக்குக் குறுகிய நாட்கள் ஏமன் நாட்டிற்குச் செல்ல இந்தியர்களை அனுமதிப்பது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அடுத்த ஒரு வாரத்தில் இந்த விவகாரத்தில் முடிவெடுக்கும்படி உத்தரவிட்டு இருந்தது.
ஒரே வழி இதுதான்: கடந்த வியாழக்கிழமை டெல்லி உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்த நிலையில், ஏமன் உச்ச நீதிமன்றம் நர்ஸ் பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டையை உறுதி செய்துள்ளது. பிரியாவின் தாயாருக்கு இன்னும் ஏமன் செல்ல அனுமதி கிடைக்காத நிலையில், இந்த உத்தரவு அவரது குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், மரண தண்டனை விதிக்கப்பட்ட நர்சின் தாயார், ஏமன் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று டெல்லி நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர் சுபாஷ் சந்திரன் கூறுகையில், ஏமனில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது மட்டுமே மரண தண்டனையில் இருந்து நர்சை காப்பாற்ற இருக்கும் ஒரே வழி என்று கூறியுள்ளார்.
அதிகாரம் படைத்த அமைப்பு: எனினும், இது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை என்றும் தெரிவித்தார். மேலும், வீட்டு வேலைகள் மட்டுமே செய்து வரும் நிமிஷாவின் தாயார், வழக்கு செலவுக்காக தனது சொத்துக்களை விற்று இருப்பதாகவும், சில ஆர்வலர்கள் மற்றும் வெளிநாட்டில் வசிப்பவர்கள் இணைந்து கவுன்சில் ஒன்றை இது தொடர்பாக அமைத்து இருப்பதாகவும் வழக்கறிஞர் சுபாஷ் சந்திரன் கூறியுள்ளார்.
மேலும் வழக்கறிஞர் சுபாஷ் சந்திரன் கூறுகையில், "ஏமனில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் மத்திய அரசு பேசுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும், தேவையான தொகையை செலுத்த தயாராக இருப்பதாகவும் கூறினார். எனினும், அரசியல் சூழல் காரணமாக அரசு மட்டுமே பேசுவதற்கான உரிய அதிகாரம் படைத்த அமைப்பு” என்றார்.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications