பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை? ஆபரேஷன் 'மகாதேவ்' ராணுவம் அதிரடி நடவடிக்கை
காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் அருகே லிட்வாஸ் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இவர்கள் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் என்று தகவல் வெளியாகி உள்ளது. சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் உடல்களை அடையாளம் காணும் பணியானது நடைபெற்று வருகிறது. அதன்பிறகே இந்த பயங்கரவாதிகளுக்கும் பஹல்காம் தாக்குதலுக்கும் தொடர்பு உள்ளதா? இல்லையா என்பது உறுதியாக தெரியவரும்.
பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது திடீரென பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் அங்கு இருந்த 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் தேடி வந்தனர்.

3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஆபரேஷன் மகாதேவ் என்ற பெயரில் தொடர்ச்சியாக தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் அருகே லிட்வாஸ் என்ற அடர்ந்த வனப் பகுதியில் சந்தேகம் படும் படி சிலர் சுற்றி வருவதாக பாதுகாபு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் அங்கு சென்ற பாதுகாப்புப் படையினர் அவர்களை பிடிக்க முயன்றனர். அப்போது அவர்கள் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.
தொடர்ந்து இரு சிஆர்பிஎஃப், ஜம்மு காஷ்மீர் போலீசார், இந்திய ராணுவத்தினர் பயங்கரவாதிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. சுட்டுக்கொல்லப்பட்ட 3 பேரும் பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது உறுதிப்படுத்தப்படவில்லை.
லஷ்கர் இ தொய்பா அமைப்பு
லஷ்கர் அமைப்பின் முக்கிய தளபதியாக விளங்கிய சுலேமன் ஷா என்ற முசா பவுஜிதான், பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் ஆவார். கடந்த ஆண்டு Z-Morh சுரங்கத்தில் நடத்தப்பட்ட தாக்குதளில் 7 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திலும் முசா முக்கிய நபராக இருந்துள்ளான்.
ஆபரேஷன் மகாதேவ் என்ற பெயரில் இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர் போலீசாருடன் இணைந்து அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்த நிலையில், இன்று பயங்கரவாதிகள் சிக்கியுள்ளனர். சுட்டுக்கொல்லபட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து 17 கையெறி குண்டுகள் மற்றும் எம் 4 கார்பைன் மற்றும் இரண்டு ஏகே 47 ரக ரைஃபிள் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம்
கஷ்மீரில் உள்ள தஷிகம் வனப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் தகவல் பரிமாற்றம் நடைபெற்றை இந்திய ராணுவம் இந்த மாத துவக்கத்தில் கண்டறிந்தது. இதையடுத்து, கடந்த 14 நாட்களாக லஷ்கர் மற்றும் ஜெய்ஷ் பயங்கரவாதிகளை மிகவும் உன்னிப்பாக இந்திய ராணுவம் கண்காணித்து வந்தது. இதன்பிறகே இன்று பயங்கரவாதிகளை சுற்றி வளைத்து இந்திய ராணுவம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் உடல்களை அடையாளம் காணும் பணியானது நடைபெற்று வருகிறது. அதன்பிறகே இந்த பயங்கரவாதிகளுக்கும் பஹல்காம் தாக்குதலுக்கும் தொடர்பு உள்ளதா? இல்லையா என்பது உறுதியாக தெரியவரும். நாடாளுமன்றத்தில் இன்று ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் தொடர்பாக விவாதம் நடைபெற்றுவரும் நாளில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications