அய்யோ போச்சே.. இந்தியா அடித்த அடியில் பாகிஸ்தானின் 9 விமானங்கள் காலி.. பரபரப்பு தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தானுக்கு சொந்தமான 9 போர் விமானங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த விமானங்கள் என்னென்ன? என்பது பற்றியும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் ‛ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த நடவடிக்கையில் நம் நாடு பாகிஸ்தானின் முக்கிய இடங்களை ஏவுகணை வீசி தாக்குதல் மேற்கொண்டது.

இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. அதன்பிறகு விமானப்படை தளங்கள், ராணுவ தளங்கள் என்று 12 இடங்கள் அழிக்கப்பட்டது. அதேபோல் பாகிஸ்தானின் போர்விமானங்கள் அழிக்கப்பட்டது.

இதற்கிடையே தான் ‛ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் பாகிஸ்தான் எத்தனை விமானங்களை இழந்தது? என்பது பற்றிய பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பாகிஸ்தானுக்கு சொந்தமான 6 போர் விமானங்கள், 2 அதிநவீன உளவு விமானங்கள், சி-130 ஹெர்குலஸ் விமானம் உள்ளிட்ட 9 விமானங்கள் அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த விமானங்களின் அழிப்புக்கு முக்கிய காரணம் நம் நாட்டின் வான்வெளி பாதுகாப்பு அமைப்பு தான் காரணம். ஆகாஷ், எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்டவை சிறப்பாக செயல்பட்டு பாகிஸ்தானின் போர் விமானங்களை முன்கூட்டியே அடையாளம் கண்டு அழித்தன. அந்த வகையில் பாகிஸ்தானின் 9 விமானங்கள் அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

முன்னதாக கடந்த மே 7 ம் தேதி முதல் மே 10ம் தேதி வரை நடந்த மோதலில்நம் நாட்டை விட பாகிஸ்தான் தான் அதிக இழப்பை சந்தித்துள்ளது. மொத்தம் ரூ.29 ஆயிரம் கோடிக்கு பாகிஸ்தான் இழப்பை சந்தித்துள்ளதாக சொல்லப்படுகிறது. முப்படைகளில் பாகிஸ்தானின் விமானப்படைக்கு தான் அதிக இழப்பு என்பது ஏற்பட்டுள்ளது. எஃப் 16 பிளாக் 52 போர் விமானங்கள் நம் படையால் வீழ்த்தப்பட்டுள்ளது.

இதன் மொத்த மதிப்பு 350 மில்லியன் டாலராகும் என்று திங் டேங் சக்ரா பவுண்டேஷன் ( think tank Chakra Dialogues Foundation or CDF) தெரிவித்துள்ளது. மேலும் 35 மில்லியன் மதிப்புடைய SAAB Erieye AWACS வழிக்காட்டும் விமானத்தை இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தான் நம் நாட்டின் அதிரடி தாக்குதலில் மொத்தம் 9 விமானங்களை பாகிஸ்தான் இழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் பல ஏவுகணைகள், நவீன ட்ரோன்கள் நம் வான்வெளி பாதுகாப்பு அமைப்பால் அழிக்கப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+