"இழப்பு என்பது போரின் ஒருபகுதி".. ரபேல் விமானம் பற்றிய கேள்விக்கு ஏர் மார்ஷல் சொன்ன பதில்
டெல்லி: பாகிஸ்தானுக்கு எதிரான ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின்போது ரஃபேல் போர் விமானத்தை நம்நாடு பறிகொடுத்ததா? என்ற கேள்விக்கு ஏர் மார்ஷல் ஏகே பாரதி, ‛‛இழப்பு என்பது போரின் ஒருபகுதியாக இருக்கும்'' என்று பரப்பான பதிலை அளித்துள்ளார்.
நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கடும் பதற்றம் என்பது ஏற்பட்டது. கடந்த மாதம் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் பலியாகினர். இதையடுத்து ‛ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் நம் நாடு பாகிஸ்தான் மீது ஏவுகணை வீசி தாக்கியது.

இதில் பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாதிகள் முகாம்கள், 3 விமானப்படை தளங்கள் அழிக்கப்பட்டன. பாகிஸ்தானும் பதிலுக்கு நம்மை தாக்க முயன்றது. ஆனால் அந்த முயற்சிகள் என்பது தோற்கடிக்கப்பட்டது. நாளுக்கு நாள் போர் பதற்றம் அதிகரித்தது. இதையடுத்து நேற்று முன்தினம் பாகிஸ்தான் கெஞ்சியதை தொடர்ந்து போர் நிறுத்தத்துக்கு நம் நாடு ஒப்புக்கொண்டது. தற்போது போர் நிறுத்தம் அமலில் உள்ளது.
இந்நிலையில் தான் நேற்று டிஜிஎம்ஓ லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் கய், மேஜர் ஜெனரல் எஸ்எஸ் ஷர்மா, ஏர் மார்ஷல் ஏகே பாரதி, துணை அட்மிரல் ஏஎன் பிரமோத் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது பாகிஸ்தானுக்கு எதிராக ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை குறித்து விளக்கினர். அப்போது பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கும் அதிகாரிகள் பதிலளித்தனர்.
அப்போது பத்திரிகையாளர் ஒருவர், ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின்போது ரபேல் போர் விமானம் வீழ்த்தப்பட்டதா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ஏர் மார்ஷல் ஏகே பாரதி, ‛‛நாம் போர் சூழலில் இருக்கிறோம். இழப்புகளும் அதன் ஒருபகுதியாகும். அதில் நாம் நமது இலக்கை அடைந்து விட்டோமா? என்பது தான். இதற்கான பதில் ஆம் தான். பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன.
இதனால் இந்த நேரத்தில் நான் அதை பற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. ஏனெனின் நாம் இன்னும் போரில் இருக்கிறோம். இதனால் எதிரிக்கு சாதகமான வாய்ப்பை வழங்கிவிடக்கூடாது. எங்கள் விமானிகள் அனைவரும் பத்திரமாக வீடு திரும்பிவிட்டனர்'' என்றார். ‛‛போர்சூழலில் இழப்புகள் ஒரு பகுதியாகவே இருக்கும்'' என்று மட்டுமே அவர் கூறிய நிலையில் கேட்ட கேள்விக்கு ஆம், இல்லை என்று நேரடியாக அவர் பதிலளிக்கவில்லை.
முன்னதாக நம் நாட்டின் ரஃபேல் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டு இருந்த நிலையில் ஏர் மார்ஷல் ஏகே பாரதி இப்படி பதிலளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications