பாகிஸ்தான் கையிலெடுத்த சீன ஏவுகணை.. இந்தியாவை தாக்க சதி.. விமானப்படை ஏர் மார்ஷல் சொன்ன திடுக் தகவல்
டெல்லி: நம் நாட்டுக்கு எதிராக பாகிஸ்தான் சீனாவில் தயாரித்த ஏவுகணைகளை பயன்படுத்தி உள்ளதை நம் விமானப்படையின் ஏர் மார்ஷல் ஏகே பாரதி உறுதி செய்துள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கடும் பதற்றம் என்பது ஏற்பட்டது. கடந்த மாதம் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் பலியாகினர். இதையடுத்து நம் நாடு பாகிஸ்தான் மீது ஏவுகணை வீசி தாக்கியது.

இதில் பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாதிகள் முகாம்கள், 3 விமானப்படை தளங்கள் அழிக்கப்பட்டன. பாகிஸ்தானும் பதிலுக்கு நம்மை தாக்க முயன்றன. ஆனால் அந்த முயற்சிகள் என்பது தோற்கடிக்கப்பட்டது. நாளுக்கு நாள் போர் பதற்றம் அதிகரித்தது. இதையடுத்து நேற்று முன்தினம் பாகிஸ்தான் கெஞ்சியதை தொடர்ந்து போர் நிறுத்தத்துக்கு நம் நாடு ஒப்புக்கொண்டது.
ஆனாலும் கூட பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை மீறி செயல்பட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீரின் பல்வேறு இடங்களில் நேற்று ட்ரோன் அனுப்பி தாக்குதல் முயற்சி எடுக்கப்பட்ட இந்நிலையில் தான் பாகிஸ்தான் உடனான மோதலின்போது அந்த நாடு சீனாவில் இருந்து வாங்கப்பட்ட ராணுவ தளவாடங்களை பயன்படுத்தினர். குறிப்பாக ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின்போது நம்மை தாக்க பாகிஸ்தான் சீன ஆயுதங்களை பயன்படுத்திதாக விமானப்படை அதிகாரி ஏகே பாரதி முதல் முறையாக கூறியுள்ளார்.
சீனாவின் பெயரை சுட்டிக்காட்டி ஏர் மார்ஷல் ஏகே பாரதி கூறினார். இவர் விமானப்படை சார்பில் ஆபரேஷன் பிரிவின் டைரக்டர் ஜெனரலாக பணியாற்றி வருகிறார். நம்நாட்டை பாகிஸ்தான் பிஎல் 15 ரக ஏவுகணை மூலம் தாக்க முயன்றது. இந்த ஏவுகணை சீனாவின் தயாரிப்பாகும். இந்த ஏவுகணை நம் நாடு சார்பில் சுட்டு வீழ்த்தப்பட்டது. பஞ்சாப்பின் ஹோசியார்பூரில் இருந்து கிடைக்கப்பட்ட துண்டுகள் சீன தயாரிப்புடன் ஒத்துப்போகிறது என்றார். அதுமட்டுமின்றி அதற்கான போட்டோ ஆதாரத்தையும் ஏகே பாரதி காண்பித்தார். இதன்மூலம் நம் நாட்டின் மீதான தாக்குதலுக்கு சீனாவின் ஆயுதங்களை பாகிஸ்தான் பயன்படுத்தி இருப்பதை நம் விமானப்படை உறுதியாக தெரிவித்துள்ளது.
இந்த பிஎல் 15 ஏவுகணை என்பது சீனாவின் அவியேஷன் இண்டஸ்ட்ரி கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது லாங்க் ரேஞ்ச் ஏவுகணை. 200 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து செல்லும். ரேடார் வழிக்காட்டுதலின்படி செயல்பட்டு தாக்கி அழிக்க வல்லது. கடந்த மாதம் 26ம் தேதி பாகிஸ்தான் விமானப்படை சார்பில் ஜேஎப் 17 எஸ் விமானத்தில் வைத்து பிஎல் 15 இ மற்றும் பிஎல் 10 ஏவுகணைகள் ஏவப்பட்ட வீடியோ வெளியிடப்பட்டு இருந்தது.
முன்னதாக ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு எதிராக பாகிஸ்தான் சீனாவின் தயாரிப்பாக பிஎல் 15 ரக ஏவுகணை மற்றும் துருக்கியின் பைகர் யிகா III காமிகஸ் ட்ரோன்களை (Turkish Byker YIHA III Kamikaze drones) பயன்படுத்தியதாகவும், அதனை நம் படைகள் சுட்டு வீழ்த்தியது. கடந்த வாரம் நம் அரசுசார்பில் மேற்கொள்ளப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில் துருக்கியின் ட்ரோன்கள் நம் நாட்டுக்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டது. இப்போது சீனாவின் பெயரும் முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவையும், துருக்கியையும் எடுத்து கொண்டால் அடிப்படையில் இருநாடுகளும் பாகிஸ்தான் ஆதரவாளர்கள். இந்த இருநாடுகளிடமும் பாகிஸ்தான் நல்ல நட்பை வைத்து ராணுவம், வர்த்தகம் உள்பட வெவ்வேறு துறைகளில் சேர்ந்து செயல்பட்டு வருகிறது .












Click it and Unblock the Notifications