ஆபரேஷன் சிந்தூர்.. அதிரடி காட்டிய இந்திய ராணுவம்! குறி வைத்தது யாரை தெரியுமா?
டெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாதுகாப்பு துறையால் ஆபரேஷன் சிந்தூர் என்று இந்த தாக்குதலுக்கு பெயரிடப்பட்டு உள்ளது. இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தளங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது இந்திய ராணுவம். நீண்ட நாள் தேடப்பட்டு வரும் பயங்கரவாதியான மசூத் அசாரை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியிருக்கிறது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கம் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, அந்த நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது. இதனால், அச்சம் அடைந்து இருக்கும் பாகிஸ்தான், எல்லைப்பகுதியில் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

பாகிஸ்தான் மீது தாக்குதல்
இதனால் எல்லையில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் பிரதமர் மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படை தளபதிகள், பாதுகாப்புத்துறை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஆலோசனை நடத்தினார். அதே நேரம் பாகிஸ்தானும் சில ஏவுகணை சோதனைகளை நடத்தியது.
இந்தியாவும் ஏவுகணை சோதனை நடத்தியதுடன், போர் விமானங்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டன. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி தரப்படும் என்று பிரதமர் மோடி கூறியிருந்த நிலையில், இன்று அதிகாலை 1.44 மணிக்கு பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.
யாரை குறி வைத்தது இந்தியா?
பாகிஸ்தானின் முரித்கி, கோட்லி, சியால்கோட், குல்பூர், பிம்பர், பஹவல்பூர் ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் தாக்குதலையடுத்து பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரத இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரை குறிவைத்து இந்தியா ராணுவம் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
மிகவும் தேடப்பட்ட பயங்கரவாதிகள் பட்டியலில் இருக்கும் மசூத் அசார் பாகிஸ்தானில் உள்ள பஹவால்பூரில் பல ஆண்டுகளாக பதுங்கியுள்ளார். இந்தியாவில் நடத்தப்படும் பல்வேறு தாக்குதல்களுக்கு மசூத் அசார் மூளையாக செயல்பட்டு இருக்கிறார். குறிப்பாக 2001 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தாக்குதலுக்கும் 2016 ஆம் ஆண்டு பதன்கோட் தாக்குதலிலுக்கு முக்கிய காரணமாக விளங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1999 கந்தஹார் விமான கடத்தலின் போது அசாத், இந்தியாவில் விடுவிக்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான் ரணுவம் மற்றும் உளவு அமைப்புகள் அவரை பாதுகாத்து வருகின்றன.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications