"தொழுகை பாதிக்க கூடாது".. பாகிஸ்தானை நள்ளிரவு 1 மணிக்கு தாக்கியது ஏன்? முப்படை தளபதி விளக்கம்
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்கு நம் நாடு ‛ஆபரேஷன் சிந்தூர்' மூலமாக பதிலடி கொடுத்தது. மே 7 ம் தேதி அதிகாலை 1 மணி முதல் 1.30 மணிக்குள் நம் படை வீரர்கள் துல்லியமாக தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தானை ஏன் நள்ளிரவு 1 மணிக்கு தாக்கினோம் என்பது பற்றி முப்படை தளபதி அனில் சவுகான் விளக்கம் அளித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நம் நாடு ‛ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. இதில் பாகிஸ்தான் பெரும் சேதத்தை எதிர்கொண்டது.
இந்நிலையில் தான் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து நம் நாட்டின் முப்படை தளதி அனில் சவுகான் முக்கிய விஷயத்தை கூறியுள்ளார்.

1 மணிக்கு தாக்குதல் நடத்தியது ஏன்?
டெல்லி ராஜ்பவனில் அனில் சவுகான் கூறியதாவது: நாம் இதற்கு முன்பு பாலகோட் ஆபரேஷனை நடத்தினோம். அந்த சமயத்தில் நம்மிடம் செயற்கைகோள் படங்கள் அல்லது பிற போட்டோக்கள் இல்லை. இப்போது நள்ளிரவு 1 மணிக்கு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை நடத்தினோம்.
2 காரணம்
இரவு நேரம் என்பதால் ஆதாரங்களை சேகரிப்பதில் சிரமம் இருக்கும் என்பதை அறிந்தே இந்த ஆபரேஷனை செய்தோம். இதற்கு 2 காரணங்கள் உள்ளன. ஒன்று நம் படை வீரர்கள் மீதான நம்பிக்கை. உறுதி தன்மை. துல்லியமாக தாக்குதல் நடத்தி சேதம் பற்றிய விவரங்களை அறிய முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. 2வது காரணம் என்னவென்றால் பொதுமக்கள் இறந்து விடக்கூடாது என்பது தான்.
மக்கள் பலியாவதை தடுக்க..
பொதுவாக இன்னொரு நாடு மீது தாக்குதல் நடத்துவதற்கு சரியான நேரம் என்னவென்றால் அதிகாலை 5.30 மணி முதல் காலை 6 மணி தான். ஆனால் அந்த சமயத்தில் அங்கு (பாகிஸ்தான்) முதல் தொழுகை நடக்கும்.
இந்த நேரத்தில் தாக்குதல் நடத்தினால் நிறைய பொதுமக்கள் இறப்பார்கள். இதனால் அந்த நேரத்தில் தாக்குதல் நடத்துவதை நாங்கள் தவிர்த்தோம்'' என்றார். இதன்மூலம் மனிதாபிமான அடிப்படையில் நம் நாடு செயல்பட்டுள்ளது.
மே 7 ம் தேதி என்ன நடந்தது?
முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 பேர் பலியாகினர். இதற்கு பதிலடியாக நம் நாடு பாகிஸ்தான் மீது ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை எடுத்தது. கடந்த மே 7ம் தேதி நள்ளிவு நடத்தியது. நள்ளிரவு 1 மணி முதல் 1.30 மணிக்குள் பாகிஸ்தான் மீது துல்லியமாக ஏவுகணைகளை வைத்து நம் நாடு தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. மொத்தம் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. அதன்பிறகு மே 10ம் தேதி வரை 4 நாட்கள் வரை நம் நாடு பாகிஸ்தானை பதம் பார்த்தது.
அப்போது பாகிஸ்தானின் வான்வெளி பாதுகாப்பு அமைப்பு, ரேடார் சாதனங்கள் அழிக்கப்பட்டன. விமானப்படை தளம், ராணுவ தளம் சேதப்படுத்தப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்க முயன்ற பாகிஸ்தானின் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இதனால் பாகிஸ்தான் நம்மிடம் சரணடைந்தது. தாக்குதலை நிறுத்துங்கள். நாங்களும் தாக்க மாட்டோம் என்று கூறி சரணடைந்தது.
தொடரும் ஆபரேஷன் சிந்தூர்
இதையடுத்து மே 7 ம் தேதி தொடங்கிய போர் மே 10ம் தேதி முடிவுக்கு வந்தது. இப்படி நம்மிடம் மண்டியிட்ட பாகிஸ்தான் போரில் வெற்றி பெற்றுவிட்டதாக தம்பட்டம் அடித்தது. அதுமட்டுமின்றி சிந்து நதி நீர் விவகாரத்தில் அணுஆயுதம், ஏவுகணை தாக்குதல் நடத்துவோம் என்றும் பூச்சாண்டி காட்டி வருகிறது.
இதையடுத்து நம் நாடு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை இன்னும் முடியவில்லை. பாகிஸ்தான் மீண்டும் வாலாட்டினால் அதிரடி தாக்குதல் நடத்துவோம் என்று அறிவித்தது. இதனால் தற்போது பாகிஸ்தான் வாலை சுருட்டிக்கொண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications