யானை பலத்தில் பாஜக.. பிசுபிசுத்த எதிர்க்கட்சிகள்! துணை ஜனாதிபதி தேர்தலில் மம்தா கட்சி மிஸ்ஸிங்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி வேட்பாளர் மார்க்ரெட் ஆல்வா வேட்புமனுத் தாக்கல் செய்தபோது மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்காதது பல்வேறு கேள்விகளுக்கு வித்திட்டுள்ளது.

இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிகாலம் நிறைவடைவதை தொடர்ந்து நேற்று புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதேபோல் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவின் பதவிகாலமும் முடிவடைய இருப்பதால் வரும் ஆகஸ்டு 6 ஆம் தேதி குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இன்று வேட்புமனுத் தாக்கல் நிறைவு

இன்று வேட்புமனுத் தாக்கல் நிறைவு

ஜூலை 6 ஆம் தேதி தொடங்கிய குடியரசுத் துணைத் தலைவருக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூலை 19 ஆம் தேதியான இன்றுடன் நிறைவடைய உள்ளது. இதனை தொடர்ந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும் தத்தமது வேட்பாளர்களை அறிவிக்க பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டனர்.

பாஜக வேட்பாளர்

பாஜக வேட்பாளர்

பாஜக சார்பில் வெங்கய்யா நாயுடு அல்லது முன்னாள் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி உள்ளிட்டோர் நியமிக்கப்படலாம் என்ற பேச்சுக்கள் அடிபட்டு வந்தன. இந்த நிலையில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக மேற்கு வங்க மாநில ஆளுநர் ஜெகதீப் தங்கர் அறிவிக்கப்பட்டு உள்ளார். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியுடன் தொடர் மோதல் போக்கை கடைபிடித்து வந்த ஜக்தீப் தங்கர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை யாரும் எதிர்பார்க்கவில்லை.

ஜக்தீப் தங்கார் வேட்புமனு

ஜக்தீப் தங்கார் வேட்புமனு


இதனை தொடர்ந்து நேற்று தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தங்கர் வேட்புமனுவை தாக்கல் செய்தார். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், மத்திய வேளாந்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உள்ளிட்டோர் வேட்புமனுத் தாக்கலின்போது உடன் இருந்தனர்.

எதிர்க்கட்சிகள்

எதிர்க்கட்சிகள்

குடியரசுத் தலைவர் தேர்தலின்போது எதிர்க்கட்சிகளின் அணி பலமற்ற நிலையில், அவர்களுடன் இருந்தவர்களே பாஜகவின் திரௌபதி முர்முவுக்கு ஆதரவளிப்பதாக கூறின. இதனால் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் வேட்பாளரை நிறுத்துமா? என்பதே கேள்விக்குறியாக இருந்தது. ஆனால், இது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்துக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்தது. மறுபக்கம் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் வேறொரு கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தது.

திரிணாமூல் எங்கே?

திரிணாமூல் எங்கே?

ஆனால், முந்தைய குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவளித்த மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த யாரும் இதில் பங்கேற்கவில்லை. அதேபோல் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவளித்த அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி பிரதிநிதிகளும் இதில் பங்கேற்கவில்லை. இதனால் எதிர்க்கட்சிகளிடையே பிளவு ஏற்பட்டிருக்குமோ என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து பேசிய சரத் பவார், "மம்தா பானர்ஜி மற்றும் அர்விந்த் கெஜ்ரிவால் ஆகியோருடன் தொடர்பில் உள்ளோம்." என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+