களமிறங்கிய சோனியா காந்தி.. நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் - திமுக எம்பிக்கள் போராட்டம்
சென்னை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள 4 புதிய தொழிலாளர் தொகுப்பு சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் இன்று சோனியா காந்தி, கனிமொழி, ஆ ராசா உள்பட எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் கண்டன போராட்டம் நடத்தினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் (குளிர்கால கூட்டத்தொடர்) நேற்று முன்தினம் தொடங்கியது. இதையடுத்து முதல் 2 நாள் நடவடிக்கையும் முடங்கியது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதுபற்றி விசாரிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சியினர் சபையை முடக்கினர். இதையடுத்து அதுபற்றி அடுத்த வாரம் விவாதிக்க மத்திய அரசு அனுமதித்துள்ளது.
இதையடுத்து இன்று முதல் சபை நடவடிக்கைகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்ட்டது. ஆனால் காலையிலேயே நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு கொண்டு வந்த 4 புதிய தொழிலாளர் தொகுப்பு சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் 4 தொழிலாளர் தொகுப்பு சட்டங்களுக்கு எதிராக கோஷமிட்டனர். அது தொழிலாளர்களுக்கு எதிரானது. முதலாளிகளுக்கு சாதகமானது. இதனால் அதனை கைவிட வேண்டும் என்று கூறினர். இந்தபோராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, திமுக எம்பிக்கள் கனிமொழி, ஆ ராசா, தங்க தமிழ் செல்வன் உள்பட பலர் பங்கேற்றனர். இது நாடாளுமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
#WATCH | Delhi | Opposition leaders protest against Labour laws in Parliament premises pic.twitter.com/K8wtZdJtAH
— ANI (@ANI) December 3, 2025
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications