100 நாள் வேலை.. மகாத்மா காந்தி பெயரை நீக்கியதற்கு எதிர்ப்பு.. எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம்
டெல்லி: 100 நாள் வேலை திட்டத்தில் இருந்து மகாத்மா காந்தி பெயரை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் மகாத்மா காந்தி சிலை முன்பாக எதிர்க்கட்சிகள் எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். மகாத்மா காந்தியின் உருவப்படத்தை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ், டி.ஆர் பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கிராம பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடச் செய்யும் வகையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அரசு 100 நாள் வேலை திட்டத்தை கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் படி ஆண்டுக்கு 100 நாட்கள் கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.

100 நாள் ஊரக வேலை திட்டம்
கிராமப் பஞ்சாயத்து அளவில் குளங்கள், ஏரிகள், கால்வாய்களை சீரமைக்கும் பணிகளுக்கும், சாலை விரிவாக்க பணிகளுக்கு என கிராமப்புற மக்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த திட்டத்தில் நாடு முழுவதும் அதாவது 15 கோடியே 40 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்துக்கு முதலில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் என பெயர் வைக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து "மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம்" என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின்படி தற்போது கிராமத்தில் உள்ள ஆண்களும், பெண்களும் பலனடைந்து வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த இந்த 100 நாள் வேலை உறுதி திட்டத்தை ரத்து செய்து, வேலைவாய்ப்புக்கான புதிய விதிகளை அமல்படுத்தும் வகையில் புதிய மசோதாவானது இன்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது.
எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் (MGNREGA) என்பதற்கு பதில் "விக்சித் பாரத் ரோஜ்கர் மற்றும் ஆஜீவிகா மிஷன் (கிராமின்) உத்தரவாதம்" (VB-G RAM G) என்ற பெயர் மாற்றத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில் இன்று லோக்சபாவில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
மசோதாவை மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் இன்று லோக்சபாவில் தாக்கல் செய்தார். இதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மசோதாவுக்கு எதிராக கோஷமிட்டனர். பிரியங்கா காந்தி, திமுக எம்பி டிஆர் பாலு உள்ளிட்டோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். டி ஆர் பாலு கூறுகையில் ‛‛மகாத்மா காந்தி மீதான வெறுப்பின் காரணமாக மத்திய அரசு பெயர் மாற்ற மசோதாவை கொண்டு வந்துள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றுவதால் என்ன பலன் கிடைக்க போகிறது? பெயர் மாற்றத்தை கைவிட வேண்டும்'' என்று கூறினார்.
மகாத்மா காந்தி புகைப்படத்துடன் போராட்டம்
தொடர்ந்து எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டதால் லோக்சபா 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து பிரியங்கா காந்தி, டி ஆர் பாலு, அகிலேஷ் யாதவ் உள்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மகாத்மா காந்தி பெயரை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு நின்று போராட்டம் செய்தனர். அப்போது அவர்கள் கையில் மகாத்மா காந்தியின் புகைப்படங்கள் அடங்கிய பதாகைகளுடம் போராட்டம் நடத்தினர்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications