மும்பையில் ஒன்றுகூடும் "இந்தியா!" ஆகஸ்ட் 25இல் ஆலோசனை! மேஜர் விஷயத்தை இறுதி செய்யும் எதிர்க்கட்சிகள்
டெல்லி: எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணியின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் அடுத்த மாதம் மும்பையில் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவை தேர்தல் அடுத்தாண்டு தான் நடைபெறுகிறது என்ற போதிலும் இப்போதே தேர்தலை மனதில் வைத்து அரசியல் கட்சிகள் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துவிட்டன. பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே அணியில் திரள வேண்டும் என்பதைப் பலரும் வலியுறுத்தினர்.

அதன்படி பல்வேறு எதிர்க்கட்சிகள் கலந்து கொண்ட முதல் கூட்டம் ஜூன் மாதம் பாட்னாவில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதற்கிடையே இரண்டாவது கூட்டம் கடந்த மாதம் பெங்களூரில் நடந்தது. இதில் தன் கூட்டணிக்கு இந்தியா எனப் பெயரிடுவதாக முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையே அடுத்த கூட்டம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி, "இந்தியா" தனது அடுத்த கூட்டத்தை ஆகஸ்ட் 25-26 தேதிகளில் மும்பையில் நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரில் நடந்த கூட்டத்தின் போதே, அடுத்த கூட்டம் மும்பையில் நடக்கும் என அறிவிக்கப்பட்ட போதிலும் தேதிகள் இறுதி செய்யப்படாமல் இருந்தது. இந்தச் சூழலில் தான் ஆகஸ்ட் 25,26 தேதிகளில் இது நடக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தக் கூட்டத்தில் Common Minimum Programme எனப்படும் பொதுவான குறைந்தபட்ச செயல்திட்டம் வகுக்கப்படும் என தெரிகிறது. மேலும், மும்பையில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், கூட்டத்தின் கன்வீனர் யார் என்பது குறித்தும் இதில் முடிவாகும் என தெரிகிறது.

இந்த மும்பை கூட்டத்திற்கான பணிகளை சிவசேனா (யுபிடி) மற்றும் என்சிபியின் சரத் பவார் பிரிவு கவனித்து வருகிறது. முதல் இரண்டு கூட்டங்கள் நடந்த மாநிலங்களில் "இந்தியா" கூட்டணியில் இருக்கும் ஆட்சியில் இருந்தன. முதல்முறையாக பாஜக கூட்டணி ஆட்சியில் இருக்கும் இடத்தில் இந்தக் கூட்டம் நடக்கிறது.
பெங்களூர் கூட்டத்தில் "இந்தியா" என கூட்டணிக்குப் பெயர் வைப்பது தொடங்கி பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. இது எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு மிக பெரிய வெற்றியாக பார்க்கப்பட்டது. மும்பை கூட்டத்திலும் அதேபோல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.
-
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் 360-டிகிரி மிரட்டல் அனுபவம்! ரசிகர்களை திக்குமுக்காட வைத்த சர்ப்ரைஸ் -
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை!












Click it and Unblock the Notifications